
INTRO :
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கைதினை தொடர்ந்து அநுராதபுரத்தில் நடைப்பெறவுள்ள கூட்டத்திற்கு அவரின் மனைவி கலந்துகொள்ளவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “மாமா மஹிந்தவுடன் மருமகள் லிமினியும் அநுராதபுரம் செல்கிறார்! ( விபரம் முதலாவது கொமண்டில்)
#Puthiyakurallka #lka #srilanka #news #latestnews #Namal #MahindaRajapaksha #limini #Anuradhapura #SLPP ” என இம் மாதம் 06 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (06.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ வருகின்ற 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைப்பெறவுள்ள பேரணியில் கலந்துகொள்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும் இது குறித்து பிரதான ஊடகங்கள் எதிலும் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
உள்ளூராட்சி உறுப்பினரின் கருத்து:
நொச்சியாகம பிரதேச சபை உறுப்பினர் செனுவிரத்ன ஜெயவர்தன கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாமலின் மனைவி பேரணியில் கலந்துகொள்வார் எனத் தெரிவித்திருந்தார். இவரின் இந்தத் தனிப்பட்ட கருத்தே சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவக் காரணமாகியுள்ளமை கண்டறியமுடிந்தது.
ஊடகப் பிரிவின் மறுப்பு:
நாமலின் மனைவின் குறித்த பேரணியில் கலந்துகொள்ளுவது தொடர்பாக
நாமல் ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு எதும் செய்திகள் வெளியிட்டுள்ளதா என அவர்களின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை நாம் பார்வையிட்டபோது, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
SLPPயின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தல்:
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்னவும் இது குறித்துக் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களில் எந்த உண்மை தன்மையும் இல்லை என்றும், அது சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே தவிர கட்சி விடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்றும் உறுதிப்படுத்தினார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அநுராதபுர கூட்டத்தில் நாமலின் மனைவி கலந்து கொள்கிறார் என பகிரப்படும் தகவல் தவறாவை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



