Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாளில் பற்றி எரியும் காடுகள் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-04-14
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நேபாளில் பற்றி எரியும் காடுகள் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது

    INTRO :
    நேபாளில் பற்றி எரியும் காடுகள் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Kado Kappu  என்ற பேஸ்புக் கணக்கில் ” உலக அழிவின் ஆரம்பம் இயற்கை அனர்த்தம் நேபாளில் பற்றி எரியும் காடுகள் 😭😭😭😭😭😭😭 நேபாளம் நாட்டுக்காக பிரார்த்திப்போம் 🙏🙏🙏”  என இம் மாதம் 29 ஆம் திகதி  (29.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த புகைப்படத்தொகுப்பினை நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி புகைப்படத்தொகுப்பில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்த போது, வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய புகைப்படங்கள் என கண்டறியப்பட்டது.

    முதலாவது புகைப்படம்

    இதை நாம் ஆய்வு செய்த போது இது 2017 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    இரண்டாவது புகைப்படம்

    இது 2021 ஜனவரி மாதத்தில் நேபாளத்தில் காட்டுத்தீ பரவலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    nepalitimes.com| Archived Link

    மூன்றாவது புகைப்படம்

    குறித்த இப்புகைப்படமானது 2016 ஆம் ஆண்டு உத்தரகண்ட் ஸ்ரீநகரில் அஹிரிகோட் பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

    indiatimes.com | Archived Link

    நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த புகைப்படத்தொகுப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டடுள்ளது.

    அதில் சி்ல புகைப்படங்கள் நேபாளத்துடன் தொடர்பு உடையதாக இருப்பினும் அவைகள் முந்தைய வருடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    மேலும், சமீபத்தில் நேபாளத்தில் பரவிவருகின்ற காட்டுத்தீ தொடர்பாக வெளியாகியிருந்த காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

    எமது தேடலுக்கு அமைய, நேபாளில் பற்றி எரியும் காடுகள் என பகிரப்படும் புகைப்படங்கள் என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நேபாளில் பற்றி எரியும் காடுகள் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-04-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.