
INTRO :
நாட்டை விட்டு வெளியேறுமாறு நிதியமைச்சர் பஷிலை தெரிவித்ததை போன்று பகிரப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் நிமிர்த்தமாக அரசாங்கத்திற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றனர்.
அதில் NewsFirst தமிழ் செய்தியில் நாட்டை விட்டு நிதி அமைச்சரை வெளியேறுமாறு கூறும் வீடியோ இம் மாதம் 20 ஆம் திகதி (20.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த வீடியோவை பார்வையிடும் போதே இது பழைய வீடியோ பதிவு என்பது நமக்கு விளங்கியது. அதற்கமைய நாம் அது எக்காலக்கட்டத்தில் வெளியான வீடியோ என கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டோம்.
அதற்கமைய நாம் Newsfirst யூடியுப் பக்கத்தில் மேற்கொண்ட தேடலின் போது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 9 ஆம் திகதி குறித்த செய்தி வெளியாகியிருந்தமை கண்டறியப்பட்டது.
அதில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் 8 ஆம் திகதி நடந்த கூட்டமொன்றில் தொலைதொடர்பாடல் அலைவரிசைகள் மஹாராஜா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தற்போதைய நிதியமைச்சர் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வண்ணம் Newsfirst நிறுவனம் குறித்த வீடியோ பதிவினை அன்று வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அதற்கமைய தற்சமயம் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சூழலில் அந்த பழைய வீடியோ பதிவினை புதியது போன்று தற்போது பதிவிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், நிதியமைச்சர் பஷிலை நாட்டை விட்டு வெளியேறுமாறு பரப்படும் டிக்டொக் வீடியோ பழைய வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:நிதியமைச்சர் பஷிலை நாட்டை விட்டு வெளியேறுமாறு பரப்பப்படும் வீடியோ உண்மையா?
Fact Check By: S G PrabuResult: Misleading


