Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கரையொதுங்கிய மீன்கள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-06-08
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழுந்து கரையொதுங்கியுள்ளன என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நா

    INTRO :
    இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழுந்து கரையொதுங்கியுள்ளன என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Dharshan Dithva  என்ற பேஸ்புக் கணக்கில் “ இதற்கான பொறுப்பனைத்தையும்

    சிவப்புத்துண்டு குடும்பமே (மகிந்த குடும்பம்) ஏற்கவேண்டும்..!

    கட்டார், இந்தியா ஏற்கமறுத்த கப்பலை இந்த மோட்டுச்சிங்களவன் ஏற்றுக்கொண்டதன் விளைவு மிகமோசமானதாக இருக்கப்போவதை நினைத்தால்தான்😢😢  என இம் மாதம் 05 ஆம் திகதி  (05.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த புகைப்படங்களை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது பல வருடங்களாக பலராலும் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படம் என விளங்கியது.

    அதன் முதற்பதிவினை நாம் தேடிய போது, அமெரிக்காவின் மெக்சிகனில் ரோஸ் பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள மோனா என்ற ஏரியில் குறித்த மீன்கள் ஒதுங்கியதாக Gerald Simmons என்பவரால் Flicker இல் 2008 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எம்மால் கண்டறியப்பட்டது.

    Graphical user interface, website

Description automatically generated

    flickr.com

    குறித்த பதிவில் மீன்கள் கடற்கரையில் துடுக்கும் வீடியோவின் முதற்பதிவினை எம்மால் கண்டறிய முடிவில்லை. இருப்பினும் அது பழைய வீடியோ என்பதை கண்டறிய முடிந்தது.


    அதற்கமைய இது கடந்த வருடம் (2020) ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளமை எம்மால் காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கரையொதுங்கிய மீன்கள் என பகிரப்படும் புகைப்படம் என வெளியான தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கரையொதுங்கிய மீன்கள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-06-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.