Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக பகிரப்படும் காணொளிகள் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-21
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன

    Subscribe to our WhatsApp Channel

    சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Claim 01

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “*💯!!சிறுவர்கள் பார்க்க வேண்டாம் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இளம் தம்பதியர் சவுதிஅரேபியா புனித தலமான மெக்காவில் அருவருதக்க செயலில் முத்தத்தை பரிமாறியதால் அதை சவுதி போலிஸ் காவலர்கள் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 14.10.26.புதனன்று சவுதி அரேபிய அரசு கொடுத்த தண்டனை தலை துண்டிக்கப்பட்டது!!* ” என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (19.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Claim 02

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “சவூதி அரேபியாவில் மக்கா நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற செயலுடன் தொடர்புடைய வழக்கில், பங்களாதேஷைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அவர்களது மகளான சிறுமி தனது பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள Link ஐ Click செய்யுங்கள்…

    Website – https://quicktamilnews.com/2026/10/19/20195/

    Facebook – https://quicktamilnews.com

    X – https://x.com/quick80668

    Whatsapp – https://whatsapp.com/channel/0029VbBzXC8LCoX33D

    #deathpanalty #saudiarabia #Bangladesh #couple #mosque #babygirl #currentnewsupdate #TamilNews #WorldNews #quicktamilnews” என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (19.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை தொடர்பாக விளக்கம்

    புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சவூதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

    இதனடிப்படையில் Nazrul Islam Abdul Basir மற்றும் Sweety Akhtar ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. India Today

    பங்களாதேஷ் வெளியுறவுத் துறை இணையமைச்சர்

    சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆணின் தாயார்

    மரண தண்டனை வழங்கப்பட்ட ஆணின் தாயார் பிபிசி பிரிவிற்கு வழங்கிய தகவலுக்கு அமைய “அவரது மகன் மதரஸாவில் படிப்பை முடித்துவிட்டு, இடைத்தரகர் மூலம் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி சவுதி அரேபியாவுக்குச் சென்றார்..

    இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான அவர், ரியாத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார்.

    தகாத செயல்களில்’ ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட மசூதியிலும் அவர் துப்புரவுப் பணியாளராக வேலை செய்ததாகத் தெரிகிறது.

    “அவர் அங்கு சென்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, என் மகன் எங்களைத் தொடர்புகொண்டார். ‘என்னைச் சிறையில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்துவிடுவார்கள்’ என்று நினைப்பதாக கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட நாங்கள் பேசினோம். இந்தச் சம்பவம் குறித்த தகவலை புதன்கிழமை அறிந்தேன்” என தெரிவித்துள்ளார்.

    மேலும் மரணத்தண்டனை வழங்கப்பட்ட பெண்ணுடன் அவர் காதல் உறவில் இருந்ததாக குடும்பத்தினரிடம் தெரிவித்தாக குடும்ப உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். BBC News

    அத்துடன் மகனின் உடலம் வீட்டிற்கு கொண்டுவர வேண்டும் என நஸீருல் தந்தை தெரிவித்துள்ளதோடு, அவரின் தாயார் மகனை கடைசியாக பார்க்க அவரின் உடலத்தினை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளதாக Times Of India வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிடலில் காணக்கிடைத்தது. Link

    மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் வீட்டார்

    குறித்த பெண்ணின் தந்தை பிபிசி செய்தி பிரிவிற்கு தெரிவித்த கருத்திற்கு அமைய “ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் இரண்டு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு அவர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    சவுதி சென்று முதல் ஆறு மாதங்கள் தனது மகள் தொடர்ந்து பணம் அனுப்பி வந்ததாகவும், அவர் சிறைக்குச் சென்ற பிறகு பணம் அனுப்புவது நின்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    அத்துடன் குறித்த பெண்ணுடன் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குறித்த ஆண் தொடர்பாக அவர் ஒருபோதும் குடும்பத்தினரிடம் எதுவும் கூறியதில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தி காணக்கிடைத்தது. BBC News


    The Daily Star வெளியிட்ட குறிப்பாணை

    The Daily Star ஊடகம் வெளியிட்டுள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகத்தின் இரகசிய குறிப்பாணையின்படி, சவுதி அரேபியாவில் கடந்த புதன்கிழமை (14.10.2026) மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள், தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக 2023 ஆகஸ்ட் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அக்டோபர் 18 திகதியிட்ட மற்றும் வெளிநாடுகளில் வாழும் பங்களாதேஷ் பிரஜைகளின் நலன்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த குறிப்பாணை, மக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரையும் Nazrul Islam Abdul Basir மற்றும் Sweety Akhtar என அடையாளம் காட்டுகிறது.

    செப்டம்பர் 30 அன்று தூதரகத்திற்கு வந்த கைதிகள் பட்டியலின்படி, சவுதி அரேபியாவின் சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் நஸ்ருல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விபச்சாரப் புகாரின் பேரில் அதற்கு அடுத்த நாள் ஸ்வீட்டி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    குறிப்பாணையின்படி, நஸ்ருல் Jeddah Correctional Facility, ஸ்வீட்டி ஜெத்தா பெண்கள் சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அல் மஜால் நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக அறிய

    Brahmanbaria துணை ஆணையர் அபு சயீத்

    இன்று வெளியாகியுள்ள பிபிசி செய்திக்கு அமைவாக (21.10.2026) சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் உடலை பங்களாதேஷத்துக்குக் கொண்டுவர அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்குத் தகவல் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என Brahmanbaria துணை ஆணையர் அபு சயீத் தெரிவித்துள்ளார்.

    மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் உடலம் பங்களாதேஷிற்கு வந்தடைந்து விட்டதா..?

    இது தொடர்பாக நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குறித்த பங்களாதேஷ் பிரஜைகளின் உடலங்கள் நாட்டிற்கு வந்தடைந்தமைக்கான உத்தியோகப்பூர்வ செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

    அத்துடன் இதுவரையில் வெளிவந்துள்ள செய்திகளுக்கு அமைய குறித்த இரு பிரஜைகளின் வீட்டாரும் அவர்களின் உடலம் வந்தடைந்ததாக எங்கும் தெரிவித்திருந்தமைக்கான செய்தி அறிக்கையிடல்கள் காணக்கிடைக்கவில்லை.

    Claim 01

    வீதியில் மரணத்தண்டனை நிறைவேற்றமா…?

    இந்த பின்னணியில் வீதியில் நடுவில் வைத்து குறித்த மரணத்தண்டனையினை வழங்கியதாக ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 2015 ஆம் ஆண்டு மரணத்தண்டனை நிறைவேற்றத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    மியான்மரைச் சேர்ந்த Laila Bint Abdul Muttalib Basim என்ற பெண், தனது கணவரின் 7 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக சவூதி அரேபிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தி அறிக்கையிடல் – CNN News | Dawn | Daily Mail

    Claim 02

    சவுதியில் மரணதண்டனை நிறைவேற்றம் பெற்றோரை இழந்த மகளின் கதறல் எனும் பகிரப்படும் காணாளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி அதனை ஆய்வு செய்தபோது, இது கடந்த மே மாதம் 26 ஆம் திகதி ( 26.05.2026) Sound News 24 என்ற பேஸ்புக் பக்கத்தில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அதற்கமைய இந்த காணொளி தற்போது மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பிரஜைகளுடன் தொடர்புடையது அல்ல என்பது நிரூபனமாகிறது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக பகிரப்படும் குறித்த இரு காணொளிகளும் தவறானவை என்பது கண்டறியப்பட்டது.

    அத்துடன் இந்த இரு பிரஜைகளும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடலம் இன்னும் நாட்டிற்கு வந்தடைந்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் உத்தியோகப்பூர்வமாக கிடைக்கவில்லை.

    மேலும் சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளவாறு முத்தமிட்டமைக்காக இவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-21

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.