Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    146வது பிறந்த நாளை கொண்டாடும் முதியவர்; உண்மை என்ன?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-12-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :146-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்ற ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின

    INTRO :
    146-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்ற ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    New lanka News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 1874 இல் பிறந்த இவர் தனது 146 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

    நம்முடைய இருதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அவரை ஆசீர்வதிப்போம்.”  என இம் மாதம் 15 ஆம் திகதி  (15.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தில் காணப்படுகின்ற கமெண்டுகளை ஆராய்ந்த வேளையில் அனைவரும் இது உண்மையென நம்பி வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    படத்தில் இருந்த முதியவர் தொடர்பில் விபரத்தினை அறிவதற்கு நாம் Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இந்தோனேஷியாவைச் சேர்ந்த மிகவும் வயதான நபர் சோடிமெட்ஜோ என கண்டறியப்பட்டது. மேலும் தேடியபோது இவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்ட செய்தியும் கிடைத்தது.

    BBC | Archived link

    எனினும் இந்தோனேசியாவில் 1900 ஆண்டுக்கு பிறகே பிறப்பு சான்றிதழ்கள் பதியப்பட்ட ஆரம்பித்துள்ளனர். இதன் நிமிர்த்தமாக இவரின் பிறப்பு ஆண்டு மீது சந்தேகம் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இருந்தும் சோடிமெட்ஜோ பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் தான் பிறந்த ஆண்டு 1870 என தெரிவித்துள்ளார்.

    dailymail| Archived

    கின்னஸ் சாதனை புரிந்தவர்களை பதிவு செய்யும் அறிக்கையின் படி உலகில் அதிக ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்த நபராக பிரான்ஸை சேர்ந்த Jeanne Calment  பெயர் பதிவிடப்பட்டுள்ளது. இவர் 122 வயது வரை உயிர் வாழ்ந்துள்ளார். எனினும் இந்தோனேசியாவை சேர்ந்த எம்பா கோடா என்ற முதியவர் 146 வயது வரை வாழ்ந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ள போது, பிரான்ஸை சேர்ந்த Jeanne Calment  சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என கின்னஸ் உலக சாதனை பதிவு கூறுகிறது.

    guinnessworldrecords.com | Archived link

    நாம் மேற்கொண்ட தேடலிற்கு அமைய எம்பா கோடா 146 வயது வரை வாழ்ந்தார் என்பது பற்றிய ஆதாரங்கள் சரியாக அமைந்திருக்கவில்லை; அத்துடன் அவர் 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். இருப்பினும் அவர் தற்போது பிறந்த நாள் கொண்டாடுவது போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:146வது பிறந்த நாளை கொண்டாடும் முதியவர்; உண்மை என்ன?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-12-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.