Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இஸ்ரேலுக்குள் பாராஷூட்டில் இறங்கிய ஹமாஸ் படை என பரவும் வீடியோ உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-10-13
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை  ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃ

    INTRO :
    இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை  ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “PUBGல இறங்குற மாதிரில்ல

     இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க 😯😟🔥 “ என இம் மாதம் 09 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (09.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)
    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்த ஹமாஸ் என்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சிலர் பதிவிட்டிருந்த வீடியோவுக்கு இது தவறு, இது எகிப்தின் ராணுவ அகாடமி என்று சிலர் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதன் அடிப்படையில் தேடினோம்.

    Archived Link

    எமக்கு இணையத்தில் வைரலாகும் குறித்த வீடியோ தொடர்பாக எந்த ஒரு தகவலையும் கண்டறிய முடியவில்லை.

    எனவே நாம் குறித்த வீடியோவில் அமைந்துள்ள கட்டிடம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள கட்டடமும், எகிப்தின் ராணுவ அகாடமியும் ஒன்றாக இருந்தது. 

    அதனை நாம் மேலும் உறுதி செய்ய கூகுள் ஸ்ட்ரீட் மேப்பை பார்த்தோம். கட்டடம், முகப்பு பகுதியில் உள்ள இலச்சினை (லோகோ) எல்லாம் சரியாகப் பொருந்தியது. இதன் மூலம் இந்த வீடியோ எகிப்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

    Google Map

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி எகிப்தின் ராணுவ அகாடமி பகுதியில் பாராஷூட் மூலம் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை இஸ்ரேலில் பாராஷூட் மூலம் நுழைந்து தாக்கிய ஹமாஸ் படையினர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இஸ்ரேலுக்குள் பாராஷூட்டில் இறங்கிய ஹமாஸ் படை என பரவும் வீடியோ உண்மையா ?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-10-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.