
INTRO :
குழந்தையை விழுங்கிய வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு சமூகவலைத்தளத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “குழந்தையை விழுங்கிய வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி
(பைத்தான்) மலைப்பாம்பு!
பாம்பின் வயிற்றை பார்த்தால் அதிர்ச்சி
வியட்நாமில் நடைபெற்ற சம்பவம்.
காட்டு விலங்குகளை வீட்டில் வைத்திருப்பது எவ்வளவு ஆபத்தானது. ” என இம் மாதம் 12 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (12.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
வியட்நாம் நாட்டிலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டிலோ வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு ஒன்று அவ்வீட்டின் சிறுமியை விழுங்கியிருந்தால், பிரதான ஊடகங்கள் உட்பட பெரும்பாலான சர்வதேச ஊடகங்கள் இத்தகைய உணர்வுபூர்வமான செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும். ஆயினும், நாங்கள் நடத்திய ஆய்வில் வியட்நாமிலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டிலோ இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்ததாக எந்தவொரு சர்வதேச ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
இந்தோனேசிய நபருக்குச் சொந்தமான வீடியோ: சிறுமி பாதுகாப்பாக உள்ளார்
ஆகவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி Reverse Image மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில், மலைப்பாம்பு சிறுமியை விழுங்கிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு பகிரப்படும் காணொளி கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.08.2026) முதன்முதலில் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
எங்களது மேலதிக உண்மைக்கண்டறியும் ஆய்வில், சிறுமி ஒருவர் மலைப்பாம்பின் உடலின் மீது விளையாடிக்கொண்டிருக்கும் காணொளியின் உண்மையான உரிமையாளர் வியட்நாம் நாட்டினை சேர்ந்தவர் அல்ல என்பதும், அவர் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் அல்பாரு (Abdul Azis Albar) என்பவர் என்பதும் தெளிவாகியது.

அவரது சமூக ஊடகப் பக்கங்களில், இந்த காணொளியில் காணப்படும் மலைப்பாம்பு மற்றும் மற்றொரு மலைப்பாம்புடன் பல்வேறு தருணங்களைக் காட்டும் ஏராளமான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேலும், அல்பாரின் பேஸ்புக் பக்கத்தில் மலைப்பாம்பு விழுங்கிவிட்டதாகக் கூறப்படும் சிறுமி தோன்றும் பல காணொளிகள் தொடர்ந்து காண முடிகிறது. சிறுமி மலைப்பாம்பின் முதுகில் இருக்கும் வீடியோக்கள் மற்றும் அவர் இரண்டு மலைப்பாம்புகளுடன் இருக்கும் காணொளிகள் கடந்த சில நாட்களாகப் பதிவிடப்பட்டிருந்ததுடன், இன்றைய தினமும் (செப்டம்பர் 21) இவ்வாறானதொரு காணொளி பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அச்சிறுமி வீட்டிற்குள் மலைப்பாம்புடன் இருக்கும் புகைப்படங்களையும் அல்பாரின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து காண முடிகிறது.

இதன் மூலம், மலைப்பாம்பு சிறுமியை விழுங்கிவிட்டதாகப் பரப்பப்படும் பதிவுகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பது தெளிவாகிறது.
அதேவேளை, அச்சிறுமி எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாகத் தொடர்ந்து அந்த மலைப்பாம்புடன் விளையாடி வருவதாக இந்தோனேசிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இதுதவிர, மலைப்பாம்பு சிறுமியை விழுங்கிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பொய்யானது எனப் பல சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
மலைப்பாம்பு உணவு விழுங்கியபோது காட்சியளிக்கும் விதம்
மலைப்பாம்பு எதாவது உணவு உண்ட பின் காட்சியளிக்கும் விதம் தொடர்பாக புகைப்படங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அப்போது குறித்த தேடலின் உண்மையாக உணவினை வயிற்றில் வைத்திருக்கும் போது மலைப்பாம்பின் தோல் பகுதியில் உள்ள வடிவம் சீராக பெரிதாக இருப்பதை அவதானிக்க கிடைத்தது. ஆயினும் குறித்த சிறுமியை விழுங்கியதாக பகிரப்படும் புகைப்படத்தில் அவ்வாறு காணமுடியவில்லை.

மலைப்பாம்பு சிறுமியை விழுங்கிவிட்டதாகக் கூறப்படும் புகைப்படம்
சிறுமியை விழுங்கிவிட்டதாகக் கூறப்படும் புகைப்படம், மூல காணொளியின் சில விநாடிகளுடன் ஒத்துப் போகின்றபோதிலும், மூல காணொளியின் அப்பகுதியில் மலைப்பாம்பின் வயிற்றுப் பகுதியைக் அவ்வாறு காண முடியவில்லை.

அதற்கமைய, மலைப்பாம்பு சிறுமியை விழுங்கிவிட்டதாகப் பரப்பப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா அஎன நாங்கள் ஆய்வினை மேற்கொண்ட போது, அதில் OpenAI இன் SynthID Watermark அடையாளம் காணக்கூடியதாக உள்ளமை கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குழந்தையை விழுங்கிய வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு என பகிரப்படும்புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



