Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நடிகர் டாம் குரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-06-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : நடிகர் டாம் குரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கி

    INTRO :

    நடிகர் டாம் குரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “Tom Cruise’s stunt doubles at the wrap party of Mission Impossible 7 👀

    Pic credit :- Facebook Harsh Warrdhan

    Lakshmi R Iyer, Twitter

    இத்தன நாள் அவனே பண்றான்னு நெனச்சு ஏமாந்துட்டேனே, பயபுள்ள ஏமாத்திட்டான் “ என இம் மாதம் 08 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (08.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, Ong Hui Woo என்ற பேஸ்புக் பயனாளி அவர்களால் ஜூன் மாதம் 4 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    குறித்த பதிவை நீக்கிய குறித்த நபர் மேலும் கடந்த 9 ஆம் திகதி (09.06.2023) மேலும் ஒரு பதிவில் இது AI மூலம் தாம் உருவாக்கிய புகைப்படங்கள் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் டாம் குரூஸ் அவரின் ஸ்டண்ட் காட்சிகளை அவரே நடிக்கும் வழக்கம் கொண்ட நடிகர். அவர் மேற்கொண்ட சில ஸ்டண்ட் காட்சிகள்…

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, நடிகர் டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் என பகிரும் புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியாகின்றது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் டாம் குரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ?

    Written By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-06-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.