Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மறைந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் சேதமின்றி காணப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-07-14
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : மறைந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் கல்லறையில் இருந்து வெளியே எடுத்த போது எவ்வித சேதமுமின்றி காணப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் த

    INTRO :

    மறைந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் கல்லறையில் இருந்து வெளியே எடுத்த போது எவ்வித சேதமுமின்றி காணப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “12 ஆண்டுகளின் பின்னர் மறைந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் சடலத்தினை கல்லறையிலிருந்து வெளியே எடுத்த போது அவரது உடல் எவ்வித சேதமுமின்றி காணப்பட்டது. “ என இம் மாதம் 06 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (06.07.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இதுதொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    முதலில் குறித்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    இணையத்தில் வைரலாகியுள்ள குறித்த வீடியோ 2011 ஆம் ஆண்டு யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. மேலும் குறித்த வீடியோ ஸ்பானிய மொழியில் தலைப்பிட்டிருந்தது. அதனை நாம் மொழியாக்கம் செய்து பார்த்த போது, மெர்சிடிஸ் பாடசாலைக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் வருகை என பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Archived Link

    குறித்த வீடியோவில் உள்ளது இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உண்மையான உடல் அல்ல, மாறாக மெழுகினால் உருவாக்கப்பட்ட சிலையாகும். இது குறித்து 2016 ஆம் ஆண்டு உண்மை சோதனை நடத்திய El Universo செய்தி அறிக்கையினை வெளியிட்டிருந்தமையும் எமது ஆய்வின் போது காணக்கிடைத்தது.

    மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மறைந்த இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் கல்லறையில் இருந்து தோன்றியெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் போது, உயர் அதிகாரிகள், வத்திகான் மற்றும் பாப்பரசர்களுக்கு மிகவும் நெருக்கமான சிலர் மேலும் சில உதவியாள்கள் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து வெளியான செய்தியறிக்கை…

    Nbcnews Link | Archived Link

    மேலும் நாம், குறித்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள gettyimages இணையதளத்தில் ஆய்வு செய்தபோது, எமக்கு கிடைக்கப்பெற்றது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, – மறைந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் சேதமின்றி காணப்பட்டது என பரவும் தகவல் மற்றும் வீடியோ போலியானது என்பது உறுதியாகின்றது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:மறைந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல் சேதமின்றி காணப்பட்டதா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-07-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.