Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடனமாடும் வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-01-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ திருமண நிகழ்வொன்றில் நடனமாடும் வீடியோ என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த

    INTRO :
    ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ திருமண நிகழ்வொன்றில் நடனமாடும் வீடியோ என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    சமூகவலைத்தளங்களில் ” ஜனாதிபதி நடனம் ஆடுகின்றார் பாதுகாவலர் அருகாமையில் “ என  வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் பகிரப்பட்டிருந்த வீடியோவை தனி தனி புகைப்படங்களாக எடுத்து ஒப்பிட்டு பார்க்கும் போது, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை ஒத்திருந்த போதிலும், அந்த வீடியோவில் உள்ள நபர் வேறு நபர் என தெரியவந்தது.

    எனினும் இந்த வீடியோ நடனமாடியவர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அல்ல டுலேண் டி சில்வா (Dooland De Silva) என சிலர் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Twitter | Archived Link


    Facebook | Archived Link

    நாம் இதனை உறுதி செய்ய டுலேண் டி சில்வா அவர்களின் மகனான டான் டி சில்வா அவர்களை தொடர்புக்கொண்டு வினவிய போது, குறித்த வீடியோவில் ஆடும் நபர் தனது தந்தை இல்லை என எமக்கு உறுதி செய்தார்.

    மேலும் குறித்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்த அவர் இது தனது தந்தையில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.

    Twitter | Archived Link

    மேலும், குறித்த வீடியோவில் ஆடும் நபரிற்கு பின்னால் ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இருந்ததாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் விளைவாக அதனை நாம் உறுதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்த்தபோது, ​​ஜனாதிபதி பாதுகாப்புப் படையினர் பெரும்பாலும் சாம்பல் நிற ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டோம்.

    Link 1 | link 2 | link 3 | link 4 

    இதேவேளையில் சமய நிகழ்வுகளில் குறித்த பாதுகாவலர்கள் வெள்ளை நிற உடையில் உள்ளமையும் காணக்கிடைத்தது.

    Link 1 | link 2

    குறித்த வீடியோவில் உள்ள நபர் ஜனாதிபதி அல்ல என்று ஜனாதிபதி ஊடகபிரிவு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஜனாதிபதி பாதுகாவலர்கள் தங்களின் காதுகளில் தொடர்பு கொள்ளும் கருவி பொருத்தியவாறே பணிகளில் ஈடுபடுவார்கள் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்தது. அதற்கமைய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ புகைப்படக் கலைஞர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பாதுகாப்பு பிரிவினர் காதுகளில் குறித்த தொடர்பு கருவி பொருத்தப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    குறித்த வீடியோ தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவிடம் வினவியபோது இது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அல்ல என எமக்கு உறுதிப்படுத்தினர்

    இதுவரையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த வீடியோவில் உள்ள நபர் யார் என்று எம்மால் இதுவரையில் கண்டறிய முடியவில்லை. இருப்பினும் இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடனமாடும் வீடியோ என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடனமாடும் வீடியோவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-01-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.