Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் எழுப்பியதாக பரவும் காணொளியில் உண்மை தெரியுமா?

    2025-12-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்

    INTRO :

    ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக அநுர கோ ஹோம் என பொது மக்கள் கோஷம் எழுப்புவதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில்“#ANURA #GO #HOME #AT #COLOMBO

    இது உண்மையா??? இல்ல voice Edited ஆ??

    “என இம் மாதம் 26 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (26.12.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த காணொளியினை நன்கு அவதானித்த போது, அதில் இருக்கும் காட்சிகளுக்கும் அதில் வருகின்ற ஒலியிற்கும் மாறுபாடு இருப்பதை அவதானித்தோம்.

    ஆகவே குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது நத்தார் தினத்தன்று (25.12.2025) கொழும்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் என பலர் குறித்த காணொளியினை பகிர்ந்திருந்தமை காணக்கிடைத்தது.

    நாம் குறித்த காணொளியினை ஆய்வு செய்தபோது, அக்காணொளியில் “கோ ஹோம் அநுர” என்ற சத்தம் இடம்பெற்றிருக்கவில்லை.

    “மெரைன் டிரைவில் தற்போதைய நிலைமை” என்ற தலைப்புடன் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் நேற்று (25.12.2025) வாகன நெரிசல் குறித்த ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தநிலையில், சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்று ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றதாக பிரதான ஊடகங்களில் எதிலும் செய்தி வெளியாகி இருக்கவில்லை.

    நாம் மேலும் குறித்த காணொளி தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, அதில் இருக்கின்ற “ கோ ஹோம் அநுர ” என்ற சத்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி (26.08.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பாக நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த கைது நடவடிக்கையிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிமன்றத்திற்கு அருகாமையில் கூடியிருந்த மக்களால் “கோ ஹோம் அநுர” என்ற கோஷம் எழுப்பியிருந்த ஒலியினை எடுத்து தற்போது வைரலாகியுள்ள காணொளியுடன் இணைத்துள்ளமை கண்டறியப்பட்டது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அநுர கோ ஹோம் என மக்கள் கோஷம் என பரவுகின்ற குறித்த காணொளியானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-12-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.