Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பால்மா விலை அதிகரிப்பிற்கு முன் 550 ரூபாவில் விற்பனைக்கு வந்த பால் மா பைக்கற்று பிண்ணனி என்ன ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-10-15
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நாட்டில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் முன் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட்

    INTRO :
    நாட்டில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் முன் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    JVP Government 2024 என்ற பேஸ்புக் பக்கத்தில் ”  கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது 7ம் திகதி ஆனால் பொதி செய்யப்பட்ட திகதி 1 திகதி. “ என இம் மாதம் 09 ஆம் திகதி 09.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் வைரலாகும் 400 கிராம் பால் மாவின் விலை 550 ரூபாவாக அச்சிடப்பட்ட ஒரு மேல் அட்டை படம் குறித்து நாம் Fonterra நிறுவனத்தின் விற்பனை முகவரிடம் இது குறித்து வினவியபோது, இது கிறீம் சுவைமிக்க உணவு பானம் என்ற ரத்தியின் புதிய பால் பைக்கற்று ஒன்றின் விலை என தெரிவித்தனர்.

    குறித்த  பால்மா, புதிதாக சந்தைக்கு  Fonterra நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதில், புதிதாக கிறீம் சுவை சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் எமக்கு விளக்கமளித்தனர்.

    Logo, company name

Description automatically generated

    மேலும், பால்மாவின் விலை அதிகரிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பொதி செய்யப்பட்ட 400 கிராம் முழு ஆடைப் பால்மாவின் விலை அப்போதைய நிர்ணயிக்கப்பட்டிருந்த 380 ரூபாவில் தான் இருக்கும் என்று தெரிவித்தார்.  குறித்த கிறீம் சுவைமிக்க உணவு பானமானது ஆரம்பம் முதல் 550 ரூபாவில் தான் காணப்படுவதாக, எமக்கு தெரியப்படுத்தினர்.

    டுவிட்டர் கணக்கில் குறித்த ரன் முசுவ சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள புகைப்படமும் பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Graphical user interface

Description automatically generated

    twitter.com | Archived Link

    கடந்த 8 ஆம் திகதி முதல் பால் மாவின் நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்திருந்ததே. எனினும் ரத்தி நிறுவனத்தின் புதிய உற்பத்தியினை புதிய விலை நிர்ணயத்திற்கு முன்னர் சந்தையில் முழு ஆடை பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கருத்தினை வெளியிட்டு தகவலினை பகிர்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பால் மாவின் விலை அதிகரிப்பிற்கு முன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யங்கள்

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பால்மா விலை அதிகரிப்பிற்கு முன் 550 ரூபாவில் விற்பனைக்கு வந்த பால் மா பைக்கற்று பிண்ணனி என்ன ?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-10-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.