Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    கடவத்த ஹட்டன் நெசனல் வங்கி ATM-ல் நடந்த கொள்ளை சம்பவமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-07-03
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :கடவத்தயில் உள்ள ஹட்டன் நெசனல் வங்கி ATMல் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம்

    INTRO :
    கடவத்தயில் உள்ள ஹட்டன் நெசனல் வங்கி ATMல் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     ANN News  என்ற பேஸ்புக் கணக்கில் “ @ANN News :

    HNB KADAWTTA யில் தற்போது ATM வங்கியில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது..

    https://fb.watch/6uwD24m07t/  “ என இம் மாதம் 2 ஆம் திகதி (02.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

     கடவத்த ஹட்டன் நெசனல் வங்கி கிளை ATMல் நேற்று இவ்வாறு கொள்ளை சம்பவம் நடந்ததா என கண்டறிய நாம் இது தொடர்பாக கடவத்த பொலிஸ் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு வினவிய போது, இவ்வாறான சம்பவம் எதுவும் நேற்றைய தினம் பதிவாகவில்லை என எமக்கு அறியக்கிடைத்தது.

    இது தொடர்பாக நாம் மேற்கொண்ட தேடலின் போது, இது இந்தோனேசியாவில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.

    குறித்த சம்பவம் இந்தோனேசியாவில் South Kalimantan இல் Banjarmasin நகரில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் எனவும், குறித்த பணத்தினை கொள்ளையிட்டு சென்ற நபர் மறுதினமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    Kompas | Archived

    Graphical user interface, website

Description automatically generated


    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய கடவத்த ஹட்டன் நெசனல் வங்கி ATMல் நடந்த கொள்ளை சம்பவம் என்று பகிரப்படும் வீடியோ இந்தோனேசியாவில் இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கடவத்த ஹட்டன் நெசனல் வங்கி ATM-ல் நடந்த கொள்ளை சம்பவமா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-07-03

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.