Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    உக்ரைனை நோக்கிச் செல்லும் ரஷ்ய பீரங்கிகள்; போர் ஆயுதங்கள்-  உண்மையான வீடியோவா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-03-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் ப

    INTRO :
    உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்களும்… “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவில் இருந்து ஸ்கிரின்ஷாட் எடுத்து புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

    அப்பொழுது இந்த வீடியோ 2012 ஆம் ஆண்டு யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    கனேடிய இராணுவத்தின் புகையிரதம் என குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய இந்த வருடம் பெப்ரவரி மாத்தில் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான யுத்தத்தை வைத்து 10 வருடங்களுக்கு முன்னெடுத்த குறித்த வீடியோவை தற்போதைய சூழலுக்கு ஏற்ப தவறான தகவல் சேர்த்து பகிர்ந்துள்ளமை உறுதியாகின்றது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்கள் என பகிரப்படும் வீடியோ 2012 ஆம் ஆண்டு கனேடிய இராணுவத்தின் புகையிரத பயணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உக்ரைனை நோக்கிச் செல்லும் ரஷ்ய பீரங்கிகள்; போர் ஆயுதங்கள்- உண்மையான வீடியோவா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-03-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.