Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பாராஷூட் மூலம் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவத்தின் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-02-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பாராஷூட் மூலம் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவத்தின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த

    INTRO :
    பாராஷூட் மூலம் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவத்தின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” உக்ரைனில் பாராசூட் மூலம் களமிறங்கிய ரஷ்யாவின் படையினர் “ என இம் மாதம் 24 ஆம் திகதி (24.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் குறித்த யுத்த தாக்குதல் என பல காட்சி வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் பாராஷூட் மூலம் உக்ரைனுக்குள் நுழைந்தனர் என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    நாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவினை கிரின்ஷாட் எடுத்து புகைப்படமாக்கி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டடோம். 

    குறித்த தேடலின் போது, இந்த வீடியோ 2016ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி Василий Белов என்ற டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    https://twitter.com/BeloFFRus/status/772445426570125312

    Archive

    நாம் இது பற்றி முழுமையான தகவல் அறிந்துக்கொள்ள குறித்த ரஷ்ய மொழி பதிவைக் காப்பி செய்து கூகுளில் தேடினோம். அப்போது, 2016 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் வெளியான வீடியோ பதிவு ஒன்று கிடைத்தது. அதில் ரஷ்யாவின் ரோஸ்டோவ் என்ற பகுதியில் ரஷ்ய விமானப்படையைச் சேர்ந்த 2000 ஆம் வீரர்கள் தரையிறங்கும் காட்சி 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில்,  2014 ஆம் ஆண்டு ரஷ்ய வீரர்கள் மேற்கொண்ட போர் பயிற்சி வீடியோவை உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் நுழைந்தனர் என வீடியோ போலியான தகவலுடன் பகிரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ்பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பாராஷூட் மூலம் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவத்தின் வீடியோ உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-02-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.