
INTRO :
இஸ்ரேலில் பாம்பு மழை என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில்“ இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை🙆♂️😣🙏
“என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (21.10.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் அது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும், ஆயினும் எமது ஆய்வின் போது அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
நாம் குறித்த காணொளியை நன்கு அவதானித்த போது அதில் காணப்பட்ட காரில் இருந்த இலக்கத்தகடு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாகனத்தின் இலக்கத்தகடு அல்ல என காணமுடிந்தது. மேலும் அது தலைகீழாக காணப்பட்டதையும் அவதானிக்க கிடைத்தது.

இஸ்ரேல் நாட்டின் வாகன இலக்கத்தகடு வடிவமைப்பினை காண இந்த இளையதள முகவரியை கிளிக் செய்யவும் Website link
இதில் காணப்பட்ட சில காட்சிகள் இயற்கைக்கு மாறாக காணப்படவே நாம் இதனை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் செயலியை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இஸ்ரேலில் பாம்பு மழை என பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.



