Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பன் உயிர் போனதாக பகிரும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-12-02
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பனின் உயிர் போனதாக ஒரு வீடியோ என  சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானத

    INTRO :
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பனின் உயிர் போனதாக ஒரு வீடியோ என  சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” பக்குவமில்லாத இன்றைய இளைஞர்களின் முட்டாள்தனமான தனது நண்பர் பிறந்தநாளை இறந்த நாளாகிய இன்றைய படித்த இளைஞர்கள்…

     கிரீம் நாசியில் ஏறி மூச்சு நின்றுவிட்டது “ என இம் மாதம் 01 ஆம் திகதி (01.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    பகிரப்படும் வீடியோ சிசிடிவி வீடியோ போன்று பகிரப்படுகின்றது. குறித்த வீடியோவில் இருக்கும் தெளிவு சிசிடிவி வீடியோக்களில் கிடைப்பது மிகவும் அரிது, மேலும் இது நான்கு வீதி சந்தி போன்று காணப்படுகின்றது. அங்கு சிசிடிவி வீதியில் பொருத்தி உள்ளது போன்று காணப்படுகின்றமை எமக்கு குறித்த வீடியோ மீது சந்தேகத்தினை ஏற்படுத்தியது.

    நாம் பகிரப்படும் வீடியோவை முழுமையாக பார்வையிட்ட போது, வீடியோ முடிவில் இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்றும் விழிப்புணர்வு மற்றும் கற்றல் நடவடிக்கைகாக எடுக்கப்பட்ட வீடியோ என பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பன் உயிர் போனதாக பகிரும் வீடியோ என பகிரப்படும் வீடியோ விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பன் உயிர் போனதாக பகிரும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-12-02

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.