Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என டைம் சஞ்சிகை வெளியிட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-04-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ என டைம் சஞ்சிகையின் அட்டை படம் வெளியானது என புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல்

    INTRO :
    உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ என டைம் சஞ்சிகையின் அட்டை படம் வெளியானது என புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூக வலைத்தளங்களில் ” கோட்டாவை வீடு செல்ல சொல்லும் நம் நாட்டவர்கள் அவரை ஜனாதிபதியாக்க கிராமங்கள் தோரும் பாடு பட்டவர்களையும் உள்ளூராட்சி தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப முன்வர வேண்டும் “ என இம் மாதம் 12 ஆம் திகதி (12.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    டைம் இதழில் ஜனாதிபதி தொடர்பாக வெளியாக அட்டைப்படம் என பகிரப்பட்ட குறித்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் முதலில் டைம் இதழில் இப்படியொரு செய்தி வந்ததா என்பதை முதலில் விசாரித்தோம். எனினும், அந்த இதழில் அவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அவதானித்தோம்.

    மேலும் இந்த ஆண்டு TIME இதழில் இவ்வருடம் (2022) ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை வெளியான TIME சஞ்சிகையின் அட்டைப்படங்களை அவதானித்த போது அங்கு கோட்டாபய ராஜபக்சவின் புகைப்படம் இல்லாது இருப்பதைக் கண்டோம். மேலும், முந்தைய ஆண்டுகளில், இது போன்ற பத்திரிகை அட்டையைப் நாம் இங்கு பரீசிலினை செய்து பார்க்கவில்லை.

    TIME | Archived Link

    TIME உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக நாம் மேற்கொண்ட தேடலின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அடங்கிய டைம் இதழின் அட்டைப்படம் எதுவுமில்லை.

    சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படத்தில் உண்மையான டைம் இதழ்களில் காணப்படாத QR குறியீட்டை அவதானித்தோம்.

    மேலும், மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள QR குறியீட்டில் காட்டப்பட்டுள்ள எண்ணை கூகுள் டூலைப் பயன்படுத்தி தெளிவாகப் பெற்றோம், அந்த எண் 9 771234 567003.

    எங்கள் மேலதிக விசாரணையில் இங்கு காட்டப்பட்டுள்ள QR குறியீடு, இணையத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய QR குறியீடு என்பதை உறுதிப்படுத்தியது.


    picng.com | Archived Link

    டைம் இதழின் அட்டை வடிவத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த இணையதளங்களில் பல உதாரணங்கள் இருக்கின்றமை காணக்கிடைத்தது.

    Link 1 | Link 2 | Link 3

    உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என டைம் சஞ்சிகை என எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது. 

    இதன் அடிப்படையில், உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என டைம் சஞ்சிகை வெளியானது என பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என டைம் சஞ்சிகை அட்டை படம் வெளியானது என பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உலகின் மோசமான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என டைம் சஞ்சிகை வெளியிட்டதா?

    Fact Check By: S G Prabu 

    Result: Altered

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-04-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.