Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ரம்புக்கனை பொலிஸ் வாகனமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-07-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்கு உரிய வாகனம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானத

    INTRO :
    ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்கு உரிய வாகனம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Lukshayan Muthukumarasamy என்ற பேஸ்புக் கணக்கில் ”  அது என்ன Rabukkana Polish ? “ என கடந்த இம் மாதம் 27 ஆம் திகதி (27.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நேற்று இடம்பெற்ற பொலிஸ் ஊடக சந்திப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் வாரியப்பொல பிரதேசத்தில் வாகனங்களை விற்பனை செய்யும் நபரொருவர் தனது ஜீப் வண்டியில் மக்களை ஏமாற்றும் நோக்கில் Polish Rabukkana என்று பெயர் பதிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பில் ஜீப் வண்டியின் உரிமையாளர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஏப்ரல் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலேயே தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை கீழே காணப்படுகின்றது.

    மேலும் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி இணைப்புக்கள்.

    liveat8.lk Link | dailymirror.lk Link

    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ரம்புக்கனை பொலிஸ் வாகனத்தின் எழுத்து பிழை என பகிரப்பட்ட புகைப்படம் தனியார் ஒருவரின் வாகனம் எனவும் இது கடந்த 3 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Avatar

    Title:ரம்புக்கனை பொலிஸ் வாகனமா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-07-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.