Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாளம் வெள்ளத்தினை படமெடுக்க சென்றவர்கள் அடித்து செல்லப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-08
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : நேபாளம் வெள்ளத்தினை படமெடுக்க சென்றவர்கள் அடித்து செல்லப்பட்டனர் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    நேபாளம் வெள்ளத்தினை படமெடுக்க சென்றவர்கள் அடித்து செல்லப்பட்டனர் என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “#கேமராவை விட உயிர் முக்கியம்! – நேபாள பேரழிவு உலகிற்கு சொல்லும் அதிர்ச்சி பாடம்! 

    நேபாளம் | இயற்கைப் பேரழிவு

    நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பேரழிவு, அவசர நேரங்களில் மனித உயிரின் மதிப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

    பேரிடர் நேரங்களில் சிலர் நிகழ்வுகளை பதிவு செய்யவும், காணொளிகளை உருவாக்கவும் முயற்சிக்கும் நிலையில், அந்த தருணங்களில் முதலில் செய்ய வேண்டியது உயிரைக் காப்பாற்றுவதே என்பதை இந்தச் சம்பவம் வலியுறுத்தியுள்ளது.

    ஒரு வீடியோ, ஒரு புகைப்படம் அல்லது ஒரு பதிவை விட, ஒரு மனித உயிர் மிகவும் முக்கியமானது என்ற உண்மையை நேபாள பேரழிவு அனைவருக்கும் நினைவூட்டியுள்ளது.

    ஆபத்து நேரங்களில் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது, அருகில் உள்ளவர்களுக்கு உதவுவது மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது தான் முக்கியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஒரு காட்சியை விட, ஒரு உயிரை பாதுகாப்பது மிகப்பெரிய மனிதநேய செயல் என்பதை இந்த பேரழிவு மீண்டும் நிரூபித்துள்ளது.

    “கேமராவை கீழே வையுங்கள்… முதலில் உயிரைக் காப்பாற்றுங்கள்.” ❤️🙏

    #FirstNewsTamil #NepalDisaster #NepalFloods #SafetyFirst #SaveLives #Humanity #NaturalDisaster #RescueOperation #EmergencyAwareness #WorldNews #TamilNews #NewsUpdate ” என இம் மாதம் 01 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (01.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்று நேபாள வெள்ளத்தின் போது அதை படமெடுக்க சென்ற மக்கள் வெள்ளத்தில் அடித்து சென்றதாக நம்பகமான செய்திகள் காணக்கிடைக்கவில்லை.

    ஆகவே குறித்த காணொளியில் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ஆய்வு செய்தபோது, இணையத்தில் நேபாள வெள்ளத்துடன் தொடர்பு படுத்தி பகிரப்படும் காணொளி கடந்த 2024 ஆம் ஆண்டு எகஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    குறித்த பதிவை மொழியாக்கம் செய்து பார்த்தபோது, “சீனா: Qiantang ஆற்றின் சக்திவாய்ந்த பேரலையினை புகைப்படம் எடுக்க முயன்ற பல பார்வையாளர்களை அடித்துச் சென்றது” என பதிவிடப்பட்டிருந்தது.

    நாம் சில Keywords இணை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, குறித்த நிகழ்வு தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்த செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    செய்தி 

    மேலும் எமது ஆய்வின் போது சில சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்களும் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளம் வெள்ளத்தினை படமெடுக்க சென்றவர்கள் அடித்து செல்லப்பட்டதாக பகிரும் காணொளிக்கும் நேபாளம் வெள்ளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாளம் வெள்ளத்தினை படமெடுக்க சென்றவர்கள் அடித்து செல்லப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா..?

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.