Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-03-11
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல்

    INTRO :
    ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” ❤️எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் …வேற்று நாட்டு ஆக்கிரமிப்பு ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும்  சிறுமி…

    💚சிறுமியின் ஆதங்கத்தை புரிந்து பதில் சொல்லாமல் பின்வாங்கி நிற்கும் ராணுவ வீரன்… “ என இம் மாதம் 01 ஆம் திகதி (01.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவில் இருந்து ஸ்கிரின்ஷாட் எடுத்து புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

    அப்பொழுது இந்த வீடியோ 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

    பாலஸ்தீனத்தினை சேர்ந்த குறித்த சிறுமி இஸ்ரேல் இராணுவ வீரரை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பல செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    தொடர்ந்து தேடிய போது 2012ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோவும் கிடைத்தது. அதில் அந்த சிறுமியின் பெயர் அஹெத் தமிமி என்றும் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து குரல் எழுப்பினார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    Youtube.com  

    எமது தேடலின் போது raya என்ற செய்தி இணையத்தளத்தில் இது குறித்து வெளியான செய்தியும் கிடைக்கப்பெற்றது. 

    raya.ps I archived link

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி என பகிரப்படும் வீடியோ 2012 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு


    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ரஷ்ய ராணுவத்திடம் ஆவேசத்தோடு பாயும் உக்ரைன் நாட்டு சிறுமி உண்மையா ?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-03-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.