Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சவுதியில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் உடல்கள் பங்களாதேஷிற்கு கொண்டுவரப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-22
    7 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO :சவுதியில் மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    சவுதியில் மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Claim 01

    Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “சவூதியில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை! உடல் தாயகம் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள்

    #SaudiArabia #Bangladesh #Mecca #Makkah #DeathPenalty #SaudiNews #BangladeshNews #InternationalNews #WorldNews #BreakingNews #TamilNews #TamilNewsToday #A7TVNews ” என இம் மாதம் 20 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (20.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Claim 02

    Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இளம் யோடிக்கு வாளால் வெட்டி மரண தண்டனை வழங்கிவிட்டு குத்தாட்டம் போடும் சவுதி அரேபியா மிருகங்கள்…

    #soudiarabia

    #Execution_of_the_death_penalty

    #Bangladesh”  என இம் மாதம் 21 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (21.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Claim 03

    Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ஒரு மசூதியில் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்குவது நியாயமானதா?

    அவர்களின் மதம் அவர்களிற்கு எதை போதிக்கிறது?

    தலை துண்டிக்கப்பட்டவர்கள் யார் இஸ்லாம் மதத்தை சேந்தவர்கள்.

    தலையை துண்டித்தவர்கள் யார்

    இஸ்லாம் மதத்தை சேந்தவர்கள்.

    2026 அக்டோபர் 14 அன்று, சவூதி அரேபியாவின் மக்கா பகுதியில் இரண்டு பங்களாதேஷ் குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர்களின் பெயர்கள் நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஸீர் (Nazrul Islam Abdul Basir) மற்றும் சித்தி அக்தர் (Siti Akhtar) எனச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    சவூதி அரேபியாவில், நீதியின் பெயரால் தலை துண்*க்கப்பட்டு கொ* செய்யப்பட்ட நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஸீர் மற்றும் சித்தி அக்தர் ஆகியோர் பங்களாதேஷ் குடிமக்களான கணவன் மனைவி ஆவர்.

    அவர்கள் அப்போதுதான் திருமணம் செய்துகொண்டிருந்தார்கள்; தேனிலவுக்காக நேபாளம் செல்ல வேண்டும் என்பது கணவரின் விருப்பமாக இருந்தது.  ஆனால், மனைவியின் விருப்பத்தின் பேரில், அவர்கள் உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியா சென்றனர். அல்லாஹ் திருப்தி அடைவான். ஒரு மசூதியின் முற்றத்தில், கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொண்டனர். ஒரு பாகிஸ்தானியர் அதை வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு, அவர்கள் கைது செய்யப்பட்டு, ஒரு விதத்தில், எந்தவித அடையாளமும் இன்றி தலை துண்*க்கப்பட்டு கொ* செய்யப்பட்டனர். பங்களாதேஷ் அரசுக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.

    தலையை வெட்டி அன்பையும், இரக்கத்தையும் போதிக்கிறதாம்.”  என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (19.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Claim 04

    Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “💔 தேனிலவுக் கனவு முதல் மரண தண்டனை வரை! சவூதியில் பங்களாதேஷ் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்!

    #SaudiArabiaNews #BangladeshiCouple #JusticeForAll #InternationalNews #ஹியூமன்ரைட்ஸ்

    #மட்டக்களப்புமாணவன் #kurutamilan”  என இம் மாதம் 20 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (20.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் குறித்த முக்கிய தகவல்களின் சுருக்கம்:

    • சம்பவப் பின்னணி: மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட Nazrul Islam Abdul Basir மற்றும் Sweety Akhtarஆகிய இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்குச் சவுதி அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. News Link
    • கைது மற்றும் காலம்: இவர்கள் இருவரும் 2023 ஆம் ஆண்டு (ஆகஸ்ட் மாதம்) தனித்தனி புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் சைபர் கிரைம் மற்றும் விபச்சாரப் புகார்களின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தூதரகக் குறிப்பாணைகள் தெரிவிக்கின்றன. Link 1 | Link 2 | Link 3
    • குடும்பத்தினரின் தகவல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் சவுதியில் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர். தங்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்துக் குடும்பத்தினருக்குத் தாமதகாவே தெரியவந்துள்ளது.
    • உடலங்கள் மீட்பு: தங்களது பிள்ளைகளின் உடலங்களை பங்களாதேஷிற்குக் கொண்டுவரக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அவர்களது உடலங்கள் இதுவரை நாட்டை வந்தடைந்தமைக்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    Claim 01

    பங்களாதேஷ் பிரஜைகளின் சடலங்கள் நாட்டை சென்றடைந்ததாக பகிரப்படும் சவப்பெட்டிகளின் காணொளிகள் உண்மையா..?

    கடந்த 14 ஆம் திகதி (14.10.2026) சவுதி அரேபியாவில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இரு பங்களாஷே் பிரஜைகளின் சடலம் பங்களாதேஷிற்கு வந்தடைந்ததாக சில காணொளிகள் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அந்த காணொளிகளின் பல காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த 17 ஆம் மற்றும் 18 ஆம் ஆகிய இரு தினங்களில் Ahmed Didar என்ற நபரினால் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.


    இவரின் பேஸ்புக் கணக்கினை நாம் ஆய்வு செய்தபோது, இவர் விமான நிலையத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பாக பல காணொளிகள் தமது கணக்கில் பகிர்ந்து வந்துள்ளமை காணக்கிடைத்தது.

    18.10.2026 அன்று பகிரப்பட்டிருந்த காணொளி

    Facebook link

    குறித்த காணொளி பதிவினை 3 முறை அவர் மாற்றியமைத்துள்ளமை காணக்கிடைத்தது.

    அவர் அதில் முதல் முதலாக பதிவிட்டிருந்த பதிவினை கூகுள் மொழிபெயர்ப்பினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, அதில் அவர் சவுதி அரேபியாவில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் அமெரிக்காவை சேர்ந்தவராக இருப்பின் சவுதி அரேபியாவின் அரசன் அல்லது அவரின் தந்தை இதை செய்ய துணிந்திருப்பார்களா..? அவர்கள் ஒரு ஏழை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்று அதிகாரிகள் கருதினர் என்ற கருத்தினை பதிவிட்டிருந்தார்.

    17.10.2026 அன்று பகிரப்பட்டிருந்த காணொளி

    குறித்த காணொளி பதிவில் பதிவிட்டிருந்த கருத்தினையும் 3 முறை அவர் மாற்றியமைத்துள்ளமை காணக்கிடைத்தது.

    Facebook Link



    அதில் முதலாவதாக அவர் பதிவிட்டிருந்த பதிவில் “சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மசூதியில் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பங்களாதேஷியர்களின் உடல்கள் அந்நாட்டை வந்தடைந்துள்ளன. ” என பதிவிட்டிருந்தமை கூகுள் மொழிபெயர்ப்பினை பயன்படுத்தி கண்டறிய முடிந்தது.

    மேலும் அவர் குறித்த இரு பதிவுகளில் அவர் இட்ட பதிவு தவறானது எனவும், அது குறித்து அனைவரிடமும் மன்னிப்பு கோரியும் அவர் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Facebook Link

    Claim 02

    இந்த காணொளியின் காணப்படும் சவப்பெட்டி தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது அது இம்மாதம் 08 ஆம் திகதி (08.10.2026 ) Shohel Ahmed Raj என்ற டிக்டொக் பயனாளி அவரின் டிக்டொக் கணக்கில் பதிவிட்டிருந்த காணொளி என கண்டறியகிடைத்தது.

    சவுதி அரேபியாவில் கடந்த 14 ஆம் திகதி மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட இரு பங்களாதேஷ் பிரஜைகளின் சடலம் இம்மாதம் 08 ஆம் திகதியே நாட்டை வந்தடைய வாய்ப்பில்லை என்பதால் குறித்த காணொளி பதிவும் தவறானவை என கண்டறிய முடிந்தது.

    Claim 03


    மூன்றாவதாக நாம் ஆய்வுக்கு எடுத்துகொண்ட காணொளியிற்கு அமைய மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பிரஜைகளை அஞ்சலிக்காக வைப்பதை போன்று பகிரப்படும் காணொளியானது, கடந்த ஜுலை மாதம் 28 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி என்பது ஆய்வின் மூலம் கண்டறியமுடிந்ததது.

    Facebook link

    லட்சுமிபூரைச் சேர்ந்த Faiz Ahmed Sajeeb (29) மற்றும் Farhad Hossain Sujan (21) ஆகிய இரு சகோதரர்கள், சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த அந்தச் சகோதரர்களின் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியமுடிந்தது. மேலும் அது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தியும் எமக்கு காணக்கிடைத்தது. News link

    Claim 04

    மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட நபர்களான Nazrul Islam Abdul Basir மற்றும் Sweety Akhtar என பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

    அதில் Nazrul Islam Abdul Basir என்பவரின் உண்மையான புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    Newslink

    ஆகவே இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் மீது சந்தேகம் எழவே நாம் SynthID Detector இனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியமுடிந்தது.

    அதேபோன்று, Sweety Akhtar இன் குடும்பம் அவரின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தில் காணப்படும் பெண்ணும் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணும் வெவ்வேறானவர்களாக காணப்பட்டனர்.

    News link | News link 2

    ஆகவே இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் மீது சந்தேகம் எழவே நாம் செயற்கை நுண்ணறிவை கண்டறியும் SynthID Detector இனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியமுடிந்தது.

    அதற்கமைய இந்த காணொளிகள் தற்போது மரணத்தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளுடன் தொடர்புடையது அல்ல என்பது ஆய்வின் மூலம் நிரூபனமாகிறது.

    ஆகவே நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி சவுதியில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் உடல்கள் பங்களாதேஷிற்கு கொண்டுவரப்பட்டதாக பகிரப்படும் காணொளிகள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது.


    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.