INTRO :
ஈரான் தலைநகரம் டெஹ்ரானில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ஈரான் தலைநகரம் டெஹ்ரானில் உள்ள ராணுவ தலமையகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்” என கடந்த மாதம் 23 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (23.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈரான் தலைநகரம் டெஹ்ரானில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தால் அது தொடர்பாக செய்திகள் சர்வதேச ஊடகத்தில் வெளியாகியிருக்கும். ஆகவே அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டு போது அவ்வாறான செய்திகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஆகவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த 2022 ஆம் ஆ்ண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி மத்திய சீனாவில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
குறித்த தீ விபத்து சம்பவம் சீனா அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சைனா டெலிகாம்’ (China Telecom)-இன் அலுவலகங்கள் அமைந்திருந்த 42 மாடிக் கட்டிடம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Link 1 | Link 2
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஈரான் தலைநகரம் டெஹ்ரானில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக பரவும் காணொளி கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



