
INTRO :
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படையினர் மற்றும் உபகரணங்கள் வெளியேற்றப்படுவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படையினர் மற்றும் உபகரணங்கள் வெளியேற்றப்படுவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது.
காணொளியில், அமெரிக்க இராணுவத்தினர் தங்களது உபகரணங்களுடன் புறப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
#SudarNews #BreakingNews #SaudiArabia
” என இம் மாதம் 19 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (19.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படையினர் மற்றும் உபகரணங்கள் வெளியேறி இருந்தால் அது குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி அறிக்கையிடலினை மேற்கொண்டு இருக்கும், ஆகவே அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறான செய்தி எதுவும் வெளியாகியமைக்கான ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
ஆகவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கடந்த 2025 ஆம் ஆண்டு குறித்த காணொளி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த பதிவில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் ஈரானுக்குப் பணியமர்த்தல் என பதிவிட்டு குறித்த காணொளியினை பகிர்ந்துள்ளதாக தெரவித்திருந்தார்.

இதற்கமைய இந்த காணொளி சமீபத்தில் எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது உறுதியாகின்றது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியறு என பகிரப்படும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



