Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மரண தண்டனை இரத்தின் பின்னர் விமான நிலையத்தில் அனோஜன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-15
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO :மரண தண்டனை இரத்தின் பின்னர் விமான நிலையத்தில் அனோஜன் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டத

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    மரண தண்டனை இரத்தின் பின்னர் விமான நிலையத்தில் அனோஜன் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “மரண தண்டனை இரத்து விமான நிலையத்தில் அனுஜன்

    #BreakingNews

    #NewsUpdate

    #tamil

    #TamilNews

    #betticola

    #muslim

    #newsfeed

    #Jaffna” என இம் மாதம் 14 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (14.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சவூதி அரேபியாவில் இலங்கையின் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக அறிவிப்பு வந்ததும் குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அறிவித்திருந்தார்.

    ஆயினும் அவர் முழுமையாக விடுதலையாகி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாக எவ்விதமான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதோடு, அது தொடர்பாக பிரதான ஊடகங்கள் எதுவும் செய்திகள் வெளியிட்டிருக்கவில்லை.

    ஆகவே நாம் குறித்த காணொளியினை நன்கு அவதானித்த போது, அது இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை ஒத்திருந்தமையை காணமுடிந்தது.

    பகிரப்பட்ட காணொளியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒத்த அறிவிப்புப் பலகை சிவப்பு கட்டத்தால் குறிக்கப்பட்டுள்ள காட்சி

    எனவே நாம் அந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, அனேஜனின் தம்பி அவரின் டிக்டொக் கணக்கில் “அண்ணா 🥹 இறுதியாக பார்த நொடிகள் 🥹🫂 ஒரு தவறு முழுவதும் கெட்டவன் ஆக்கி விட்டது🥹 ” என்ற பதிவிட்டு குறித்த வீடியோவை கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

    https://www.tiktok.com/@god_1_8/video/7672399657145863444?is_from_webapp=1&sender_device=pc&web_id=7631204423238960647

    அனோஜனின் தம்பி கருத்து,

    இது தொடர்பாக மேலதிக விளக்கத்தினை பெற நாம் அனோஜனின் தம்பியை தொடர்புக்கொண்டு வினவியபோது, அண்ணனின் மரண தண்டனை ரத்து தொடர்பான செய்தி தமக்கு ஆறுதல் அளித்தாலும், அண்ணன் மீண்டும் நாடு திரும்புவதே தமக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என தெரிவித்தார்.

    மேலும், அண்ணனிற்கு அங்கு என்ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

    இதனடிப்படையில் , இன்னும் அனோஜன் சவூதி அரேபியாவில் உள்ளமை உறுதியானது.

    அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து

    2026 ஜூன் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட ஒரு மதரீதியான தர்க்கத்தின் போது, அனோஜன் சிவராசா பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு கமென்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    அந்த கமென்ட்டை பதிவிட்ட 10 நிமிடங்களுக்குள் அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டு, மன்னிப்புக் கோரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இருப்பினும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்கள் சவூதியிலுள்ள அவரது நிறுவனத்திற்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதை அடுத்து, 2026 ஜூலை மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

    2026 ஜூலை 27 அன்று, அல்-அஹ்சா (Al-Ahsa) குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு இணையக் குற்றச்சாட்டுகளின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதம் விதித்தது.

    அதன் பின்னர் இந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அரசுத் தரப்பு கோரிக்கைக்கு இணங்க, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் அனோஜனுக்கு வழங்கப்பட்ட தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது. Link

    அதனை தொடர்ந்து இலங்கையின் பல அரசியல் வாதிகள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அனோஜனின் மரணத்தண்டனை தீர்ப்புக்கு எதிராக தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

    மேலும் இலங்கை அரசாங்கம் மற்றும் விசேட சட்டக்குழுவினர், சவூதி சட்டத்தரணிகளுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    அதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி, அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அடிப்படையான மரண தண்டனை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

    இது குறித்தான அறிவிப்பை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

    Facebook Link

    அனோஜனின் வழக்கினை சவுதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யவதற்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள சட்ட நிறுவனமொன்றின் ஊடாக குறித்த மேல் முறையீட்டினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இந்த மேன்முறையீடு விசாரணையின் பின்னர் அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

    ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

    ஆகவே நாம் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெருமவை தொடர்புக்கு கொண்டு அனோஜனிற்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அவருக்கான எதிர்கால சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதிலும் ஏதேனும் மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவியபோது, இரு வாரங்களுக்குள் குற்றவியல் நீதிமன்றத்தில் அனோஜனின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அவருக்கான எதிர்கால சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் தீர்பளிக்கப்படும் என சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டதாகவம் அவர் எமக்கு தெரிவித்தார்.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி மரண தண்டனை இரத்தின் பின்னர் விமான நிலையத்தில் அனோஜன் என பகிரப்படும் காணொளி அவர் இலங்கையில் இருந்து சவுதி அரேபியா செல்லும் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: மரண தண்டனை இரத்தின் பின்னர் விமான நிலையத்தில் அனோஜன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

    Written By: S.G.Prabu

    Result: Misleading

    சந்தேகத்துக்குரிய காணொளிகள் மற்றும் படங்களை சரிபார்க்க ஃபேக்ட் கிரஸண்டோவின் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்புமாறு கோரும் பதாகை
    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.