INTRO :
கண்டி – கொழும்பு புகையிரதம் தடம் புரள்வு என சமூகவலைத்தளங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “”தப்பிச்சா போதும்-டா சாமி..🙏🏻 எகிறி குதித்து ஓடிய 100+ பேர்’..😨 மரண பிடியில் இருந்து மீண்ட காட்சி!
#SriLanka #heavyrains #landslide ” என இம் மாதம் 10 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (10.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காணொளியில் தெரிவித்ததை போன்று இலங்கையில் கண்டி கொழும்பு பிரதான புகையிரத வீதியில் ஏற்பட்ட ரயில் தடம் புரள்வா என்ற ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி (24.04.2026) பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறிய முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த காலக்கட்டதில் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளும் எமது ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றன.
செய்தி அறிக்கை – Thinakaran.lk | Adaderana Tamil
கண்டி – கொழும்பு புகையிரதம் தடம் புரள்வு
குறித்த காணொளியில் தெரிவித்ததை போன்று பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம், கங்கொட மற்றும் கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை (05.10.2026) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டிருந்தது.
புகையிரத பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் “திட்வா” சூறாவளியால் சுமார் 10 மாதங்கள் கொழும்பு- கண்டி பிரதான புகையிரத சேவையானது பாதிப்படைந்திருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் திகதி (02.10.2026) மீண்டும் கொழும்பிலிருந்து – பேராதனை வரையிலான புகையிரத சேவையானது ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இலங்கை புகையிரத சேவையில் கடந்த காலக்கட்டத்தில் இயற்கை மற்றும் தொழில்நுட்ப கோளாருகள் காரணமாக பல புகையிரத அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பாக சில தகவல்கள் பின்வருமாறு,
கடந்த 2023 ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்குள்
- கரையோர புகையிரத பாதையில் (Coastal Railway Line) பதிவான முக்கிய புகையிரத தடம்புரள்வு சம்பவங்கள்
1. வாதுவ பகுதியில் – சாகரிகா புகையிரத விபத்து (ஏப்ரல் 2026)
பெலியத்தையிலிருந்து மறுதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘சாகரிகா’ (Sagarika Express) விரைவு புகையிரதம் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வாதுவ பகுதியில் தடம்புரண்டது. Thinakaran.lk
2. மருதானையில் சாகரிகா புகையிரதம் தடம்புரள்வு ( செப்டெம்பர் 2023)
மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படும் சாகரிகா புகையிரதம் மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் கடந்த செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2023 (2023.09.11) தடம் புரண்டுள்ளது. Adaderana Tamil | youtube link
3. கொழும்பு கோட்டை – கொள்ளுப்பிட்டி இடைப்பகுதி (செப்டெம்பர் 2023)
மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம் கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டதால், கரையோரப் பாதையின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tamilfm | Daily Mail
- மலையகத் புகையிரத பாதையில் (Up-Country Line / Main Line)
1. பொடி மெனிகே தடம் புரண்டது (டிசம்பர் 2023)
பதுளைக்கும் ஹாலிஎலக்கும் இடையில் பொடி மெனிகே கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி புகையிரதம் தடம் புரண்டது. Tamilmirror | ITN News
2. உடரட்ட மெனிகே தடம் புரள்வு (பெப்ரவரி 2024)
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி தடம் புரண்டது. adaderana
3. பொடி மெனிகே தடம் புரண்டது (செப்டெம்பர் 2025 )
பதுளையிலிருந்து காலை கொழும்பு நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதம் பதுளை மற்றும் ஹாலி எல புகையிரத நிலையங்களுக்கு இடையில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தடம் புரண்டது. DailyMirror
- வடமேற்கு & வடக்கு / கிழக்குப் பாதைகள் (Northern Line,Batticaloa Line & Trincomalee Line )
1. மின்னேரியா காட்டுப்பகுதி (அக்டோபர் 2024)
எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதம் யானைக்கூட்டத்தின் மீது மோதியதில் தடம் புரண்டு, எரிபொருள் கசிவு ஏற்பட்டதுடன் பெரும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. Thinakaran.lk | Hirunews.lk
மேலே இலங்கையில் சில புகையிரத பகுதிகளில் இடம்பெற்ற தடம்புரள்வுகள் தொடர்பாக செய்திகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறித்த தடம்புரள்வுகளுக்கான காரணங்கள் தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
மலையகப் பாதையில் தடம் புரள்வுகள் அடிக்கடி நிகழக் காரணங்கள்:
1.புவியியல் மற்றும் இயற்கைச் சவால்கள்:
- கடுமையான நிலச்சரிவுகள், பாறை இடிபாடுகள் மற்றும் பெய்யும் கனமழையால் தண்டவாளங்களின் கீழ் உள்ள மண் அரித்துச் செல்லப்படுதல்.
2. புகையிரத பாதையில் காணப்படும் வளைவுகள் :
- மலையகப் பாதையில் உள்ள வளைவுகளில் புகையிரதம் செல்லும் போது ஏற்பாடும் அதிகப்படியான உராய்வு மற்றும் பிரேக் கோளாறுகள்.
3.பழமையான மரக்கட்டைகள் :
- ஈரப்பதம் காரணமாக தண்டவாளத்தைத் தாங்கும் மரக்கட்டைகள் மக்கிப் போவதால், தண்டவாளங்களின் இடைவெளி (Track Gauge) விரிவடைந்து சக்கரங்கள் கீழே இறங்க வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
கரையோர புகையிரத பாதையில் தடம் புரள்வுகள்
நிகழக் காரணங்கள்:
1. கடற்காற்று அரிப்பு (Coastal Corrosion):
கடல் காற்று மற்றும் உவர்ப்புத் தன்மை காரணமாக தண்டவாளங்கள் விரைவாகச் துருப்பிடித்து பலவீனமடைதல்.
2.வேகக் கட்டுப்பாடு மீறல் & பாதை நிலை:
பழமையான தண்டவாளக் கட்டமைப்பின் அளவிற்கு ஏற்ப வேகத்தை சீரமைக்கத் தவறுவது.
3. சிக்னல் அமைப்பு பாதிப்படைத்தல்
கரையோர புகையிரத பாதையில் பாவணையில் உள்ள சிக்னல் அமைப்பில் ஏற்படும் கோளாருகள் காரணமாக தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளன.
வடமேற்கு & வடக்கு / கிழக்குப் பாதைகள் தடம் புரள்வுகள் நிகழக் காரணங்கள்
1. வனவிலங்கு மோதல்கள்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் யானைகள் தொடருந்து பாதையைக் கடக்கும்போது ஏற்படும் மோதல்களால் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் தடம் புரள்வு சம்பவங்கள் அதிகம் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தங்களை தடுக்க முன்னெடுக்கும் பணிகள்
- வனவிலங்கு மோதல்கள் இடம்பெறுகின்றமை குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் புகையிரதத்தில் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் Thermal Imaging Cameras வை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. Hiru News
- செயற்கை நுண்ணறிவு (AI): பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியலாளர்களுடன் இணைந்து, தண்டவாளத்தில் யானைகள் இருப்பதை முன்கூட்டியே கண்டறியும் AI தொழில்நுட்ப அடிப்படையிலான சோதனைகளும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Newswire | Sunday Times
இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்கு நாம் புகையிரத திணைக்களத்தினை தொடர்புக்கொள்ள முயற்சித்தும் எவ்விதமாக பயனும் அளிக்கவில்லை. ஆகவே அவர்களின் உத்தியோகப்பூர்வ தகவல்கள் கிடைத்த பின் இக்கட்டுரையினை மீண்டும் புதிப்பிக்கின்றோம்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கண்டி – கொழும்பு புகையிரதம் தடம் புரள்வு என பகிரப்படும் காணொளி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட சந்தர்பபத்தில் எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



