
INTRO:
TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ Person Of The Year 2024 – Ramanathan Archchuna ”இம் மாதம் 29 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (29.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து சிலர் தமது கருத்துக்களையும் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது அதில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனனின் தலையினை வைத்து எடிட் செய்யப்பட்டிருந்தமை காணமுடிந்ததது.
மேலும் இதனை உறுதி செய்ய நாம் கூகுளில் TIME’s Person of the Year என தேடியபோது அதில் இறுதியாக டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் தேடிய போது Time சஞ்சிகையின் உத்தியோகப்பூர்வ இணையத்திலும் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளதோடு, அவரை தெரிவு செய்தமைக்கான காரணத்தினையும் குறிப்பிட்டிருந்தமை காணக்கிடைத்தது. Link
நாம் இரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்த்த போது, டொனால்ட் டிரம்பின் புகைப்படத்தில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனனின் தலையினை வைத்து எடிட் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டதாக பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டரா…?
Written By: S G PrabuResult: Altered



