Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது என பரவும் தகவல் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-19
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட்: ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது என்ற தலைப்புடன், இரு ஆண்கள் மற்றும் ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ள படம்

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ “கிரிந்திவெலயில் பிரம்மாண்ட ஆயுதக் கிடங்கு சிக்கியது!” – 5 துப்பாக்கிகள், 3,843 தோட்டாக்கள் மற்றும் 2 கைக்குண்டுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது!

    கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் (Colombo District Crimes Division) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (அக்டோபர் 17) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 5 அதிநவீன துப்பாக்கிகள், 3,843 நேரடித் தோட்டாக்கள் மற்றும் 2 கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

    5 துப்பாக்கிகள்: வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் (Pistols) – 2, ரிவோல்வர் ரகத் துப்பாக்கி (Revolver) – 1, வெளிநாட்டுத் தயாரிப்பு 12-போர் ரீப்பீட்டர் துப்பாக்கி (12-Bore Repeater) – 1, மற்றும் மற்றொரு 12-போர் ரகத் துப்பாக்கி – 1.

    3,843 நேரடித் தோட்டாக்கள்:** 12-போர் பயன்பாட்டுத் தோட்டாக்கள் – 398, 16-போர் தோட்டாக்கள் – 35, 9mm தோட்டாக்கள் – 278, .32 ரகத் தோட்டாக்கள் – 49 மற்றும் .22 ரகத் தோட்டாக்கள் – 3,083.

    கைக்குண்டுகள்: “GRENADE HAND STUN K 409” எனக் குறிப்பிடப்பட்ட 15 சென்டிமீட்டர் உயரமுடைய பச்சை நிறச் உருளை வடிவிலான கைக்குண்டு – 1 மற்றும் இலக்கம் அழிக்கப்பட்ட அதேபோன்ற மற்றொரு கைக்குண்டு – 1.

    இவ்வளவு பெரிய அளவிலான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இலக்கம் 91, மேல் மில்லதே, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த சரித் கனிஷ்க ராஜகருண (Charith Kanishka Rajakaruna – வயது 37) எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

    இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் (மச்சான் / உறவினர்) ஆவார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    சட்டவிரோதமான முறையில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின்கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய அளவிலான ஆயுதங்களை அவர் சேகரித்து வைத்திருந்ததன் நோக்கம் என்ன மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் இவருக்குத் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.” என இம் மாதம் 18 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (18.10.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கடந்த சனிக்கிழமை கொழும்பு பிராந்திய குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல வீதிப் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போது, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் குறித்த திரையரங்கின் கிடைக்கப்பெறவே மில்லத்தே பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய குறித்த திரையரங்கின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

    குறித்த கைது தொடர்பாக பிரதான ஊடகங்களில் வெளியான செய்தி அறிக்கைகள் – Newsfirst.lk | ITN News

    இதனை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் சரித் கனிஷ்க ராஜகருண ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் என சில சமூக வலைத்தளப்பதிவுகள் பகிர்ந்திருந்தமை காணக்கிடைத்தது.

    பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா விளக்கம்


    “கொழும்பு குற்றப் பிரிவால் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அரசாங்க சார்பு செய்தித்தாள் ஒன்றின் சமூக ஊடகக் கணக்கு உட்பட பல ஊடகங்களில் ஒரு செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

    முதலாவதாக, மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் நான் ஒரே ஆண் பிள்ளை என்பதையும், எனக்கு வேறு சகோதரர்கள் இல்லை என்பதையும் நான் கூற விரும்புகிறேன்.

    அத்துடன், பரம்பரைப் பெயரைக் கொண்ட எவராவது ஒருவர் செய்யும் தவறு, அதே பரம்பரைப் பெயரைக் கொண்ட அனைவருக்கும் பொருந்தும்மா என்பதை இத்தகைய செய்தி வெளியிடும் ஊடக நிறுவனங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

    கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் நான், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் துப்பாக்கியை பெற்றுக் கொள்ளாததுடன், எனது தந்தை காலஞ்சென்ற சரத் வத்ர ராஜகருணாவும் ஒருபோதும் துப்பாக்கியைத் தன்வசம் வைத்திருந்ததில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

    இத்தகைய சூழ்நிலையில், சில ஊடகங்கள் எனது நற்பெயருக்கு அரசியல் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில், என்னுடன் தொடர்பில்லாத ஒரு சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட எனது பெயரைப் பயன்படுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது.

    அதன்படி, எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் தொடர்புடைய செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எனது வழக்கறிஞர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், அரசாங்கத்தின் திவால்நிலையை மூடிமறைக்கவும், சமூகத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், பொதுமக்களின் கருத்தைத் திசைதிருப்பவும் நோக்குடன் மாலிமா அரசாங்கம் மேற்கொள்ளும் இத்தகைய இழிவான செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.” என ஊடக அறிக்கை ஒன்றினை அவரது உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இது குறித்து மேலதிக விளக்கத்தினை நாம் பெற்றுக்கொள்வதற்காக அவரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர் தனக்கு சகோதரர் இல்லை எனவும், தூரத்து முறையில் உறவினர் எனவும் தெரிவித்தார்.

    உறவு முறை குறித்து விளக்கம்



    நாம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கும், பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா உறவு முறை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவிடம் வினவியபோது,

    அவரின் தந்தையின் அண்ணனின் மகனின் மகன் என எமக்கு தெளிவு படுத்தினார்.

    அவர் தெளிவுப்படுத்திய உறவு முறைக்கு அமைய, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணாவிற்கு மகன் என்ற உறவு முறையே அமையும்.

    அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணாவிற்கு சகோதரர் முறை வருபவர் அல்ல என்பது உறுதியானது.

    பொலிஸ் ஊடகப்பிரிவு

    பகிரப்படும் சமூகவலைத்தள பதிவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராஜகருணா கைது செய்யப்பட்ட நபர் சகோதரர் என்று பொலிஸார் தெரிவித்ததாக பதிவிடப்பட்டுள்ளது.

    ஆகவே இது குறித்து நாம் உண்மையினை அறிய, பொலிஸ் ஊடகப்பிரிவினை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, பொலிஸால் அவ்வாறு எவ்விதமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை என எமக்கு தெரிவித்தனர்.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷன ராஜகருணாவின் சகோதரர் அதிரடி கைது என பகிரப்படும் தகவல் தவறானவை என்பது கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.