Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    உலகின் முதல் புகையிரதம் என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-07-07
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒரு புகைப்படத்துடன் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறி

    INTRO :
    யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒரு புகைப்படத்துடன் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Muhammad Sabrin என்ற பேஸ்புக் கணக்கில் உலகின் முதல் புகையிரதம்  24/12/ 1809 பிடித்தால் like and share பன்னுங்க “ என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் பகிரப்பட்ட குறித்த வீடியோவில் இருந்து ஸ்கிரின் ஷாட் எடுத்து அதை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, ஒரு இணையத்தில் பதியப்பட்டிருந்த அறிக்கை கிடைக்கப்பெற்றது.

    silentfilmlivemusic.blogspot.com | Archived Link

    அதனடிப்படையில், இது Buster Keaton என்பவரினால் தயாரிக்கப்பட்ட Our Hospitality என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி என கண்டறியப்பட்டது.

    இது 1923 ஆம் ஆண்டு வெளியாக அமெரிக்க அமைதியான நகைச்சுவை படம் என்பது குறிப்பிடத்தக்கது. wikipedia

    இதை நாம் யூடியுப் தளத்தில் தேடியபோது குறித்த திரைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் ஆய்வுசெய்தபோது, தற்போது பகிரப்பபடுகின்ற காணொளியும் காணக்கிடைத்தது.

    மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, முதலாவது பயணிகள் புகையிரதம் 1825 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இது இங்கிலாந்தில் ஸ்டாக்டன் நகரிலிருந்து டார்லிங்டன் நகர் வரை சென்றுள்ளது.

    britannica.com | Archived Link

    historytoday.com | Archived Link 


    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உலகின் முதல் புகையிரதம் என பகிரும் வீடியோ 1923 ஆம் ஆண்டு வெளியான Our Hospitality என்ற திரைப்படத்தில் உள்ள வீடியோ என கண்டறியப்பட்டது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உலகின் முதல் புகையிரதம் என பரவும் வீடியோ உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-07-07

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.