Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    10 வருடங்களுக்கு பின்னர் சிறுவனின் இன்றைய நிலையா இது ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-06-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : 10 வருடங்களுக்கு பின்னர் சிறுவனின் இன்றைய நிலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண

    INTRO :

    10 வருடங்களுக்கு பின்னர் சிறுவனின் இன்றைய நிலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ நேசத்தின் விதையொன்று விருட்சமானது இன்று..

    10 years later 🥹 “ என இம் மாதம் 27 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (27.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக முதலில் நாம் குறித்த புகைப்படத்தில் உள்ள பெண் நபர் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, அவர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் Land of Hope என்ற நிறுவனத்தின் நிறுவனரான Anja Ringgren Lovén என கண்டறியப்பட்டது.

    நாம் அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தினை ஆய்வு செய்த போது, இணையத்தில் வைரலாகி வருகின்ற புகைப்படத்தினை காணக்கிடைத்தது.

    Instagram Link

    அதனை நாம் அவதானித்தபோது, அதில் குறித்த புகைப்படத்தில் உள்ள பையனின் பெயர் Prince எனவும், 10 வருடங்களுக்கு முன்னர் தாம் இவருக்கு பாடசாலை செல்ல பை வாங்கி கொடுத்ததாகவும் தற்போது அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முதல் நாள் என தெரிவித்து பதிவேற்றியிருந்தமை காணக்கிடைத்தது.

    நாம் மேலும் அதில் இருந்த புகைப்படத்தொகுப்பை அவதானித்த போது, 10 வருடங்களுக்கு முன்னர் Prince எவ்வாறு இருந்தார் என்பதற்கான புகைப்படமும் காணக்கிடைத்தது.

    தொடர்ந்து நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, குறித்த வைரல் புகைப்படத்தில் தண்ணீர் குடிக்கும் சிறுவனின் பெயர் Hope என கண்டறியப்பட்டது.

    dailymail Link | Archived Link

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, 10 வருடங்களுக்கு பின்னர் சிறுவனின் இன்றைய நிலை என பகிரப்பட்ட தகவல் போலியானது என உறுதியாகின்றது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:10 வருடங்களுக்கு பின்னர் சிறுவனின் இன்றைய நிலையா இது ?

    Written By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-06-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.