Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஜனாதிபதிக்கு எதிராக பதாதை ஏந்தினாரா யோஹானி?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-04-06
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக பதாதை ஏந்திய யோஹானி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கு

    INTRO :
    இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக பதாதை ஏந்திய யோஹானி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” யாரு யாரு தேடுனிங்க😝 “ என இம் மாதம் 05 ஆம் திகதி (05.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நமது குழுவினர் குறித்த புகைப்படத்தினை பார்வையிட்ட போதே இது பழைய புகைப்படம் என தெளிவாக எமக்கு விளங்கியது. அதற்கமைய ஆய்வினை மேற்கொள்ள அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தினை ஆய்வு செய்த போது, கடந்த மாதம் 11 ஆம் திகதி ஓமான் நாட்டில் இருந்த  போது பதிவிட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    instagram | Archived Link

    அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு அமைய அவர் இந்தியாவில் இருந்து பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    instagram

    இலங்கையில் நடைபெற்று வருகின்ற போராட்டம் தொடர்பாக பல்வேறு கலைஞர்கள் பேசி இருந்த நிலையில், யோஹானி அது தொடர்பாக இதுவரையில் எவ்விதமான பதிவினையும் அவரின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக எமக்கு காணக்கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அவர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக பதாதை ஏந்தியுள்ளவாறு ஒரு புகைப்படத்தினை எடிட் செய்து பகிர்ந்துள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

    குறித்த பதிவினை பதிவிட்டரின் பதிவிட்டு கீழ் சிலர் இது தவறான புகைப்படம் என பதிவிட்டிருந்தமையும் எம்மால் காணக்கிடைத்தது.

    அதன்பின்னர் குறித்த பதிவு அப்பயனாளாரால் நீக்கப்பட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.

    இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், அதற்கு ஆதரவாக கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும் தங்களின் ஆதரவுகளை வழங்கி வருகின்ற நிலையில் யோஹானியும் ஆதரவினை வழங்கியுள்ளதாக தவறான செய்தியினை இணையத்தில் பரப்பியுள்ளனர்.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஜனாதிபதி எதிராக பதாதை ஏந்தின யோஹானி என பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஜனாதிபதிக்கு எதிராக பதாதை ஏந்தினாரா யோஹானி?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-04-06

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.