Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    மனோ கணேசன் தெரிவித்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை அறிக!!!

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-08
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசின் சதி காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறையில் இருப்பதாகவும் அவருக்காக அனைத்து தமிழ் பேசும் மக்களும் குரல் கொடுப்போம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவ

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசின் சதி காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறையில் இருப்பதாகவும் அவருக்காக அனைத்து தமிழ் பேசும் மக்களும் குரல் கொடுப்போம் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

    எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் அனுர அரசின் சதி நாமல் சிறையில் இருப்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் நாமழுக்காக குரல் கொடுப்போம் என தெரிவித்து நேற்று (2026.09.07) பகிரப்பட்டுள்ளது.

    மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் பின்னர், உண்மையில் மனோ கணேசன் அவர்கள் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டதனைப் போன்ற ஏதேனும் கருத்துக்களை தெரிவித்திருப்பாராயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும், எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.

    மேலும் நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் சமூக ஊடகப் பக்கமொன்றில், அவர் தொடர்பில் போலியான செய்திகள் பகிரப்படுவதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.


    பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

    சமூக ஊடகங்களில் பகிரப்படும் மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக நாம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம், இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும், லண்டன் இலக்கத்தில் இருந்து இந்த போலியான பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, இவ்வாறான போலி செய்திகளை பரப்புகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

    மேலும் அவர் உள்ளிட்ட மற்ற சில உறுப்பினர்கள் தொடர்பிலும் இந்த பக்கத்தில் போலிச் செய்திகள் பகிரப்படுவதாகவும் மனோ கணேசன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அநுர குமார திஸாநாயக்க அரசின் சதி காரணமாகவே நாமல் ராஜபக்ஷ சிறையில் இருப்பதாகவும் அவருக்காக அனைத்து தமிழ் பேசும் மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது என்பது கண்டறிப்பட்டுள்ளது. 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: மனோ கணேசன் தெரிவித்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை அறிக!!!

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.