
INTRO :
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜனிகாந்த் மரணம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகர் ரஜினிகாந்த் உயிரிழந்தார் “ என இம் மாதம் 3 ஆம் திகதி (03.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
தமிழ் திரையுலகில் பிரசித்தி பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கடந்த மாதம் 28 ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள், அவர் இரத்த நாள திசு அழிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கண்டறிந்தனர். அவருக்கு Carotid artery revascularization எனும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சிகிச்சை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பிய புகைப்படத்தினை ரஜினிகாந்த் அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரணம் என்ற செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


