Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-01-09
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பாராளுமன்ற உறுப்பினரான நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் க

    INTRO :
    பாராளுமன்ற உறுப்பினரான நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட 20 ரூபாய் நாணயம் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Azeem Jahfer என்ற பேஸ்புக் கணக்கில் ” பாராளுமன்ற உறுப்பினர் Naseer Ahamed அவர்களை கௌரவிக்கும் முகமாக புதிய 20 ரூபாவை வெளியிட்டுள்ள அரசாங்கத்திற்கு நன்றிகள் உரித்தாகட்டும்.!

    #ஜயவேவா! #லஜ்ஜநெந்த_ஒபதுமாட! 😂💩”  என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி  (31.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்த போது இலங்கை மத்திய வங்கியால் அதன் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஞாபகார்த்த நாணயக் குற்றியொன்றினை வெளியிட்டுள்ளது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.

    Facebook link | Archived link 

    இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கையும் கிடைக்கப்பெற்றது.

    website link | Archived link 

    அதிலும் இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டிருந்த ஞாபகார்த்த நாணயக் குற்றி என கண்டறியப்பட்டது.

    நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்டிருந்த ஞாபகார்த்த நாணயக் குற்றி என கண்டறியப்பட்டது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நசீர் அகமதை கௌரவிக்கும் முகமாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டதா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-01-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.