Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டு பிடிப்பா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-11-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறு

    INTRO :
    இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ”  இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில்  7500 ஆண்டுகளுக்கு முன்னர்* நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு

    எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ?

    7500 ஆண்டுகளுக்கு முன்னர்

    அதாவது அமெரிக்க கண்டம் கண்டு பிடிப்பதற்கு முன்னர்.

    அதாவது கிறித்துவம், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர்.. “ என இம் மாதம் 12 ஆம் திகதி (12.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இது வியட்நாம் நாட்டில் உள்ள Cát Tiên archaeological site எனற இடம். அங்கே கடந்த 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்து குடியேறிய மக்களால் அதிகமான சிவ லிங்கம் கொண்ட கோயில்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

    அந்த இடங்களில் ஒன்று தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் உள்ள கோயிலும். கடந்த 1985 ஆம் வருடத்தில் நடைபெற்ற அகழாய்வில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

    Graphical user interface, application, PowerPoint

Description automatically generated

    Southeastasianarchaeology Link I en.vietnamplus.vn link I Vietnamtourism.gov.vn link

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டு பிடிப்பு என பகிரப்படும் புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டு பிடிப்பா?

    Fact Check By: S G Prabu 

    Result: Partly False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-11-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.