Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    “ஊது பாவை” மூலிகைச் செடியா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-11-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஊது பாவை மூலிகைச் செடி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவ

    INTRO :
    ஊது பாவை மூலிகைச் செடி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூக வலைத்தளங்களில் ”  “ஊது பாவை” மூலிகைச் செடி. “ என கடந்த செம்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி (27.09.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் குறித்த  வீடியாவினை நன்கு அவதானித்த போது, அதில் LUKE PENRY.EXR என்ற சொல் பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதனை பயன்படுத்தி கூகுளில் ஆய்வு செய்தபோது, ஒரு சிஜிஐ வேலை செய்யும் நபர் ஒருவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் எமக்கு கிடைத்தன.

    அவற்றினை நன்கு அவதானித்த போது, Dr Roy Kallivayalil அவர்கள் குறித்த வீடியோவினை பகிர்ந்து, இது ஊது பாவை என்றும் இவை மருத்துவ குணம் மிக்க மூலிகை செடி என்று குறிப்பிட்டு பதிவிட்ட டுவிட் இற்கு பதில் அளித்துள்ள Luke Penry இது அவருடைய சிஜிஐ பணி என குறிப்பிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அவரின் இன்ஸ்டெகிராம் கணக்கில் குறித்த வீடியோவினை பதிவிட்டு, அதில் இது 3டி வேலை என்ற ஹாஸ்டெக்கினையும் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Instagram

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், “ஊது பாவை” மூலிகைச் செடி என பகிரப்படும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:“ஊது பாவை” மூலிகைச் செடியா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-11-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.