
INTRO :
ஓராண்டு ஆணாகவும், மறு ஆண்டில் பெண்ணாகவும் மாறும் ஈரிதழ் சிட்டு என ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” தெரியுமா உங்களுக்கு? ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் ஒரே உயிரினம் ஈரிதழ் சிட்டு “ என கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பாக, நியூஸ்7 தமிழ் ஊடகப்பிரிவின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவியுள்ளனர்.
‘’அவர்களது குழுவைச் சேர்ந்த ஒருவர் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் குறிப்பிட்ட செய்தியை இணையதளத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டிருந்ததாகவும், அதன்பிறகு, அதனை நாங்கள் சரிபார்த்த போது, தவறான தகவல் என தெரியவரவே, உடனடியாக அவர்களது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் இருந்து அகற்றிவிட்டோம். ஆனாலும், பலர் இதனை இன்னமும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மேலதிக ஆதாரத்திற்காக, எமது மலையாள பிரிவினர் உதவியுடன், கேரளாவைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர் சுகதன் (Dr. R Sugathan, Ornithrologist) விளக்கம் கேட்டறிந்தோம்.
அவர் கூறுகையில், ‘’இது sunbird எனப்படும் தேன்சிட்டு குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். மலர்களில் தனது நீண்ட அலகை வைத்து தேன் உறிஞ்சி குடிப்பதே இதன் பிரதான பணியாகும். இந்த பறவையினத்தில், ஆண் பறவை நன்கு வளர்ந்து, இனப்பெருக்க காலத்தை எட்டும்போது, அதன் நிறம், தோற்றம் மற்றும் இறகுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்.
இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு, ஆண் பறவையின் கவர்ச்சி மறைந்து, பார்ப்பதற்கு ஒரு பெண் பறவை போல மாறிவிடும். அதாவது, சாதாரண நாட்களில் ஆண், பெண் பறவைகளின் தோற்றத்தில் பெரிய வேறுபாடு இருக்காது.
மற்றபடி, அதன் உடல் உறுப்புகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை தவறாக புரிந்துகொண்டு, பறவையின் உடலில் ஆண், பெண் என மாறுபாடு ஏற்படுவதாகச் சிலர் இத்தகைய வதந்தி பரப்பி வருகிறார்கள். இது மிகவும் தவறான தகவல்,’’ என்றார்.
எனவே, ‘’ஈரிதழ் சிட்டு (தேன் சிட்டு) உடலில் ஏற்படும் கவர்ச்சி தோற்றத்தை தவறாக புரிந்துகொண்டு, அதன் உடல் உறுப்புகள் ஆணாகவும், பெண்ணாகவும் மாறும் என தவறான தகவலை இணையதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்; அதனை படிக்கும் புதுமுக பத்திரிகையாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்குகின்றனர்,’’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஓராண்டு ஆணாகவும், மறு ஆண்டில் பெண்ணாகவும் மாறும் ஈரிதழ் சிட்டு என்ற தகவல் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது இந்திய பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:ஓராண்டு ஆணாகவும், மறு ஆண்டில் பெண்ணாகவும் மாறும் ஈரிதழ் சிட்டு; உண்மை தெரியுமா ?
Fact Check By: S G PrabuResult: False


