Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானாரா…?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-10-19
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிற

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில்“ ✅👉இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் காலமானார்..!

    🌐On, October 18, 2025 “என இம் மாதம் 18 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (18.10.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று முன்னாள் ஜனாதிபதி காலமானாராகில் அது தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் ஆகவே நாம் இது தொடர்பாக பிரதான ஊடகங்களை ஆய்வு செய்த போது அவ்வாறான எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை.

    மேலும், எந்தவொரு அரசியல் தலைவர்களும் அல்லது பிரபல ஊடகவியலாளர்களும் இது தொடர்பாக எவ்விதமான இரங்கல் செய்திகள் வெளியிட்டு இருக்கவில்லை.

    அவரின் மரணம் தொடர்பாக பதிவுகள் இட்ட பல பேஸ்புக் பக்கங்கள் குறித்த பதிவுகளை நீக்கியுள்ளதோடு, குறித்த செய்தி போலியானது என பதிவுகள் இட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.

    நாம் இது தொடர்பாக உண்மையினை கண்டறிய அவர்களின் காரியாலத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர்கள் நல்ல உடல் அரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானார் என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-10-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.