Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இஸ்ரேல்  – ஈரான் போரில் தொடர் குண்டு மழை என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-06-19
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இஸ்ரேல் –  ஈரான் போர் தொடர்பில் தற்போது பல காணொளிகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தொடர் குண்டு மழை என்று தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொ

    இஸ்ரேல் –  ஈரான் போர் தொடர்பில் தற்போது பல காணொளிகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தொடர் குண்டு மழை என்று தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் தொடரும் குண்டுதொடரும் குண்டு மழை….! மழை….! என தெரிவிக்கப்பட்ட இந்த காணொளியானது நேற்று (2025.06.18) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் இது தொடர்பில் ஆராய்ந்த போது குறித்த காணொளியானது வீடியோ கேம் காணொளி என்ற விதத்தில் கமென்ட் செய்யப்பட்டிருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

    எனவே இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரின் போது இவ்வாறு குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்படுவதனை காட்டும் காணொளிகளுடனான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.

    எனவே குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, ComparedComparison என்ற YouTube தளத்தில் 2025.04.09 ஆம் திகதி  குறித்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அதில் குறித்த காணொளியானது, ArmA 3 என்ற வீடியோ கேமைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு எனவும்  இது மிகவும் யதார்த்தமான கிராபிக்ஸ்களை கொண்டது எனவும் கற்பனையான காட்சிகளை கூட இந்த கேம் உண்மை என எண்ணும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் நாம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் சர்வதேச உண்மைக் கண்டறியும் நிறுவனமான factly இணையதளத்திலும் இந்த காணொளி ஒரு வீடியோ கேம் காணொளி என்பதனை அறிக்கையிடப்படிருந்தது.

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion (முடிவு)

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் குண்டு மழை வீசப்படுவதாக பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன் அந்த காணொளி ArmA 3 என்ற வீடியோ கேமின் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-06-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.