Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-12-18
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று ச

    ‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

    தகவலின் விவரம்:

    Archive Link

    இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

    இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. 

    பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

    உண்மை அறிவோம்:

    சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் கூட அவ்வப்போது ஃபேக்ட்செக் வெளியிட்டு வருகிறோம். 

    Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2 l Fact Crescendo Tamil Link 3

    இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும். ஆம், இந்த வீடியோ சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் எடுக்கப்பட்டதல்ல…

    இது ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவில் உள்ள Tbilisi என்ற நகரில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவாகும். 

    கடந்த 2018ம் ஆண்டு அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ராட்சத மீன் தொட்டி திடீரென உடைந்ததால், அதில் இருந்த மீன்கள் கடை முழுக்க சிதறி கிடந்தன என்றும், அவற்றை ஊழியர்கள் தேடித் தேடி சேகரித்தனர் என்றும் செய்திகள் மூலமாக, தெரியவருகிறது. 

    mirror.co.uk link l dailymail link 

    இதுதொடர்பாக ஏற்கனவே நமது மலையாள பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

    Fact Crescendo Malayalam Link 

    எனவே, சென்னைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வீடியோ ஒன்றை எடுத்து, சென்னை மழை, வெள்ள பாதிப்புடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்பியுள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது. 

    முடிவு:

    உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

    Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

    Avatar

    Title:‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

    Written By: Fact Crescendo Team 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-12-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.