Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    இலங்கையில் வெள்ளை யானை ஜோடி தென்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-07-30
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : இலங்கையில் வெள்ளை யானை ஜோடி என ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்த

    1-இலங்கையில்-வெள்ளை-யானை-ஜோடி-Search-Results-Facebook-07-29-2025_07_26_PM.png


    INTRO :

    இலங்கையில் வெள்ளை யானை ஜோடி என ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

    1-இலங்கையில்-வெள்ளை-யானை-ஜோடி-Search-Results-Facebook-07-29-2025_07_26_PM.png

     Facebook Link  | Archived Link


    சமூகவலைத்தளங்களில்“இலங்கையில் வெள்ளை யானை ஜோடி

    முழு விபரத்தை காண : 

    Whatsapp : https://whatsapp.com/channel/0029VaeCNH9GpLHQeT73CJ2A “என இம் மாதம் 29 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (29.07.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இதுஉண்மையெனநினைத்துபலர்பகிர்ந்திருந்தமையும்காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது குறித்து பிரதான ஊடகங்களில் எதும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை முதலில் மேற்கொண்ட வேளையில், அவ்வாறு எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருந்தமை காணக்கிடைக்கவில்லை.

    ஆகவே இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, Lifetrackerz என்ற பேஸ்புக் பக்கத்தில் குறித்த யானைகள் தொடர்பில் வெளியாகியிருந்த ஒரு புகைப்படத்தொகுப்பு மற்றும் காணொளியும் கிடைக்கப்பெற்றது.

    அதில் குறித்த யானைகள் அப்பிரதேசத்தில் உள்ள வெண்ணிற  சேறு மற்றும் மணல் இந்த யானைகளின் உடலில் ஒட்டியிருப்பதால் இவை வெள்ளையாக காட்சியளிப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் இதனை உறுதி செய்ய நாம் குறித்த பிரதேசவாசிகளை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர்களும் குறித்த யானையின் மீது வெண்ணிற சேறு மற்றும் மணல் ஒட்டியிருப்பதால் அது வெண்ணிறமாக காட்சியளிப்பதாக தெரிவித்தனர்.

    நாம் இது குறித்து கூடுதல் விளக்கத்தினை பெற சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜெயந்த விஜேசிங்கேவை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த யானைகள் வெண்ணிற சேறு மற்றும் மணல் ஒட்டியிருப்பதனால் தான் அவ்வாறு காட்சியளிக்கின்றது என உறுதி செய்தார். மேலும் இதுவரையில் இலங்கையில் வெண்ணிற யானை கண்டுப்பிடிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என எமக்கு தெரிவித்தார்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் வெள்ளை யானை ஜோடி தென்பட்டதாக பரவும் புகைப்படம் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:இலங்கையில் வெள்ளை யானை ஜோடி தென்பட்டதா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-07-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.