
INTRO
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொபர்டோ கார்லோஸ் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் உறுதி செய்யப்பட்ட தகவல்! பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொபர்டோ கார்லோஸ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை பிரேசிலில் தஃவா பணியில் ஈடுபட்டு வரும் ஷெய்க் யாசர் அவர்களும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் அவர்களை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வானாக. என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொபர்டோ கார்லோஸ் உண்மையில் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
எனினும் நாம் இது குறித்து தொடர்ந்து ஆராய்ந்த போது பல சர்வதேச ஊடகங்களில் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பகிரப்படும் தகவல்கள் தவறானது என ரொபர்டோ கார்லோஸ் மறுத்துள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.
மேலும் அந்த செய்திகளில் பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான ரொபர்டோ கார்லோஸ் (Roberto Carlos), மொராக்கோவைச் சேர்ந்த பிஃபா (FIFA) உரிமம் பெற்ற கால்பந்து முகவரான சுஹைலா எல் தஹிரி (Souhaila El Tahiri) என்பவரைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து, அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையத்தில் செய்திகள் பரவின.
சவுதி அரேபியாவின் ‘ஒகாஸ்’ (Okaz) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கார்லோஸ் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். தமக்கு இஸ்லாம் மதத்தின் மீது “மிகுந்த மரியாதை” உள்ளதாகவும், தனது மனைவி தொழுவதைப் பார்ப்பதை மதிப்பதாகவும் கூறிய அவர், ஆனால் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷாகின் (Ali Şahin), கார்லோஸ் தன்னைச் சந்தித்து ஷஹாதா (Shahada) கூறி இஸ்லாமியராக மாறினார் என்று கூறியதை அடுத்து, துருக்கிய ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரவத் தொடங்கியது. மேலும், இவர்களது இஸ்லாமிய திருமண முறை போன்ற படங்கள் சிலவும் இணையத்தில் பரவின.
இரு குடும்பங்களின் மத நம்பிக்கைகளையும் மதிக்கும் வகையில், தனது கத்தோலிக்கக் குடும்பத்தினருக்காக ஒரு முறையும், மனைவியின் குடும்பத்தினர் மற்றும் முஸ்லிம் நண்பர்களுக்காக மற்றொரு முறையும் எனப் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடத்தப்பட்டதாகக் கார்லோஸ் விளக்கியுள்ளார். Link
மேலும் saudi gazette இன் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் ராபர்டோ கார்லோஸ், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். அந்த மதத்தின் மீது தனக்கு “மிகுந்த மரியாதை” இருப்பதாகவும், ஆனால் மொராக்கோ கால்பந்து முகவரான சுஹைலா எல் தஹிரியைத் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் அந்த மதத்தைத் தழுவியதாகக் கூறப்படும் கூற்றுகள் உண்மையல்ல என்றும் அவர் கூறியுள்ளதாக பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் அவரின் மூன்றாவது திருமணம் சடங்கின் போது எடுக்கப்பட்ட படத்துடனேயே அந்த தகவல் பகிரப்பட்டிருந்தது.
அதேபோன்று Gulf News இணையதளத்திலும் “எனக்கு இஸ்லாத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு, என் மனைவி பிரார்த்தனை செய்வதைப் பார்ப்பது அற்புதமானது, ஆனால் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகப் பரவி வரும் வதந்திகள் உண்மையல்ல,” என்று கார்லோஸ் ஒகாஸிடம் கூறினார். என செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொபர்டோ கார்லோஸ் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் மேலும், தனது மனைவி ஒரு முஸ்லிம் என்பதால், அவர் ஒரு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும், தான் இஸ்லாம் மதத்தை பெரிதும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது சர்வதேச செய்திகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



