Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இலங்கை மத்திய வங்கி  புதிதாக 10,000 ரூபா நாணயத்தாளை வெளியிட்டுள்ளதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel இலங்கை மத்திய வங்கியினால்  புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண

    Subscribe to our WhatsApp Channel

    இலங்கை மத்திய வங்கியினால்  புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே அந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் புதிதாக பத்தாயிரம் ரூபாய் அச்சடிக்கப்படுவதாகவும்  அதுவே நம் நாட்டின் புதிய முன்னேற்றம் என்றும் ஜேவிபி / என்பிபி  கட்சியில் புதிதாக முளைத்த தோழர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்து நேற்று (2026.10.26) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    FB | FB | FB

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று

    எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று உண்மையில் இலங்கை  மத்திய வங்கி 10000 ரூபா நாணயத்தாள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதா என்பது தொடர்பிலேயே ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில், இலங்கை மத்திய வங்கி 10,000 ரூபா பெறுமதியான நாணயத்தாளை வெளியிட்டதாகப் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தனவா என்பது குறித்து நாம் ஆய்வு செய்தோம். எனினும், அவ்வாறான செய்தி எதனையும் காண முடியவில்லை. அத்துடன், இலங்கை மத்திய வங்கி அவ்வாறான அறிவிப்பொன்றையும் வெளியிட்டிருக்கவில்லை.

    இது தொடர்பாக மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் நாம் ஆய்வு செய்தோம். அங்கும் புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டதாக எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள அதிகூடிய பெறுமதியுடைய நாணயத்தாள் 5,000 ரூபா – இலங்கை மத்திய வங்கி

    இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களிலும், தற்போது புழக்கத்தில் உள்ள அதிகூடிய பெறுமதியுடைய நாணயத்தாளின் மதிப்பு 5,000 ரூபா என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. Archived

    இலங்கை மத்திய வங்கி

    இது தொடர்பாக நாம் இலங்கை மத்திய வங்கியிடமும் வினவியபோது, 10,000 ரூபா பெறுமதியான நாணயத்தாள் இலங்கையில் அச்சிடப்படவில்லை என்றும், இதுவொரு போலியான தகவல் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    மேலும் அவ்வாறான 10,000 ரூபா நாணயத்தாளை வெளியிடுவதற்கான உடனடித் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், தற்போது இலங்கையில் புழக்கத்தில் உள்ள அதிகூடிய பெறுமதியுடைய நாணயத்தாள் 5,000 ரூபா மட்டுமே எனவும் தெரிவித்தனர்.

    தற்போது புழக்கத்தில் உள்ள 1000 ரூபா நாணயத்தாளின் தோற்றத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட போலியான திருத்தம்

    2026ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாணயத்தாளின் படத்தை உன்னிப்பாக அவதானிக்கும்போது, அதில் நிதி அமைச்சரின் கையொப்பமாகக் குறிப்பிடப்பட்டுள்ள கையொப்பம், நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க பொதுவாகப் பயன்படுத்தும் கையொப்பம் அல்ல என்பதை அவதானிக்க முடிகிறது.

    இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணயத்தாள்களின் இலக்கக் குறியீடுகள், ஒவ்வொரு நாணயத்தாளின் பெறுமதிக்கும் ஏற்ப வேறுபடுகின்றன. பொதுவாக, 20, 50, 100, 500, 1,000 மற்றும் 5,000 ரூபா நாணயத்தாள்களில் முறையே W, V, U, T, S மற்றும் R ஆகிய ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, 1,000 ரூபா நாணயத்தாள்களுக்குப் பயன்படுத்தப்படும் S என்ற ஆங்கில எழுத்து, சமூக ஊடகங்களில் பகிரப்படும் 10,000 ரூபா நாணயத்தாள்களிலும் காணப்படுகிறது.

    இதன் மூலம், சமூக ஊடகங்களில் பரவிய 10,000 ரூபா நாணயத்தாளின் படம், தற்போது புழக்கத்தில் உள்ள 1,000 ரூபா நாணயத்தாளின் படத்தைத் திருத்தி உருவாக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. சமூக ஊடகங்களில் பரவிய படத்திற்கும் அசல் நாணயத்தாளின் படத்திற்கும் இடையிலான ஒப்பீடு கீழே வழங்கப்பட்டுள்ளது.

    ALTERED
    Original

    தொடர்ந்து சமூக ஊடகங்களில் 10,000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்பட்டதாக பகிரப்படும் பதிவு

    Instagram

    இந்த தகவலானது  இந்த வருடம் மே மாதமளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இதன்போதும் அந்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ அறிக்கை வெளியிட்டிருந்தது.

    மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குறித்த நாணயத்தாளில், இலங்கை நாணயத்தாள்களில் பயன்படுத்தப்படாத பொருத்தமற்ற எழுத்துருக்கள், நிறங்கள் மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தியதில் காணப்படும் வெளிப்படையான குறைபாடுகளைக் அவதானிக்க முடிகிறது. அத்துடன், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கூகுள் ஜெமினியின்Google Gemini Watermark உடன் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு என்பதையும் தெளிவாகக் கண்டறிய முடிந்தது.

    Also Read: ஜனாதிபதியின் கையெழுத்துடன் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள் தொடர்பான தெளிவுபடுத்தல்

    இலங்கை மத்திய வங்கியினால் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டமை உண்மையா?

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube


    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் புதிதாக 10,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் மற்றும் அது தொடர்பில் வெளியான புகைப்படம் போலியானவை  என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இலங்கை மத்திய வங்கி 10,000 ரூபா நாணயத்தாள் எதனையும் வெளியிடவில்லை எனவும், தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள அதிகூடிய பெறுமதியுடைய நாணயத்தாள் 5,000 ரூபா மாத்திரமே என்பதனையும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.