Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தமை உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-01-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    கடந்த கால அரசியல் களத்தில் மிகவும் பேசப்பட்ட நபரான டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்ளில் புகைப்படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மையை கண்டறியும் நோக்

    கடந்த கால அரசியல் களத்தில் மிகவும் பேசப்பட்ட நபரான டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்ளில் புகைப்படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

    எனவே இதன் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link

    UAE இல் இடம் பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தகவல்? என தெரிவிக்கப்பட்டு நேற்று 2025.01.29 இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இது தொடர்பில் பகிரப்பட்ட பல்வேறு சமூக ஊடக பதிவுகளையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

    மேலும் அவரின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று நாம் ஆராய்ந்த வேளையில் நேற்றைய தினம் டேன் பிரியசாத்தினால் அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளி பகிரப்பட்டிருந்ததனையும் எம்மால் காணமுடிந்தது.

    Facebook | Archived Link

    இதேவேளை தொடர்ந்து அவரது பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்த போது அவரின் மரணம் தொடர்பான செய்திகள் பொய் என தெரிவிக்கும் பதிவொன்றையும் எம்மால் காண முடிந்தது.

    மேலும் குறித்த சமூக ஊடக பதிவில் விபத்து இடம்பெற்றதாக தெரிவித்து பகிரப்பட்ட புகைப்படத்தினை நாம் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, அது 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி டுபாயில் உள்ள ஷேக் முகமது பின் சயீத் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது.

    மேலும் குறித்த விபத்தில் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்ததையடுத்து khaleej times என்ற இணையதளத்திலும் குறித்த விபத்து தொடர்பில் செய்தி வெளியாகியிருந்து. 

    குறித்த பதிவு தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் பொலிஸ் ஊடகப்பிரிவிற்கு தொடர்பு கொண்டு வினவியபோது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று டேன் பிரியசாத் உயிரிழந்தமை தொடர்பான எந்தவித தகவல்களும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் அது தொடர்பில் ஆராய்ந்து தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    பொலிஸ் ஊடகப்பிரிவிடமிருந்து முழுமையான தகவல் கிடைத்தவுடன் இந்த கட்டுரையில் நாம் அதனை இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.

    எனவே நாம் டேன் பிரியசாத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தபோது அரபு மொழியில் குரல்பதிவொன்று ஒளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவரின் இலக்கத்திற்கு வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியொன்றை அனுப்பிய போது அந்த குறுஞ்செய்தி deliver ஆன போதிலும் அது seen செய்யப்படவில்லை.

    மேலும் இது தொடர்பில் டேன் பிரியசாத்தின் நெருங்கிய நண்பர்களிடம் இது குறித்த கேட்ட போது அவர் தற்போது டுபாயில் இருப்பதாகவும் எனினும் அவர் வாகன விபத்தில் உயிரிழந்தமை தொடர்பில் தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும்“ தெரிவித்தனர்.

    அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயரை குறிப்பிட வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய நாம் தகவல் வழங்கிய டேன் பிரியசாத்தின் நண்பர்களின் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    தெளிவுபடுத்தல்

    தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனினும் அவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படமானது 2017 ஆம் ஆண்டு டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய புகைப்படம் என்பது தெளிவாகின்றது.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தமை உண்மையா?

    Written By: Suji Shabeedhran  

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-01-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.