Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறாரா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-04-23
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : AGS  தயாரிக்கும் புதிய திரைப்படத்தில்  இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்  என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    AGS  தயாரிக்கும் புதிய திரைப்படத்தில்  இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்  என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    facebook Link  |  Archived Link

    சமூகவலைத்தளங்களில் “AGS  தயாரிக்கும் புதிய திரைப்படத்தில்  இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்!  

    #AGSEntertainment | #SaiAbayanker | #ArchanaKalpathi | #ProvokeMedia “என இம் மாதம் 13 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (13.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் AGS Entertainment நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, சாய் அப்யங்கர் கதாநாயகனாக நடிக்க இருப்பதான அறிவிப்புக்கள் எதுவும் பதிவிட்டிருக்கவில்லை.

    மாறாக AGS Entertainment நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான அர்ச்சனா கல்பதி அவர்களின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த 13 ஆம் திகதி (13.04.2026) சாய் அப்யங்கர் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

    குறித்த பதிவில் எமது அடுத்த தயாரிப்பிற்கு சாய் அப்யங்கரை வரவேற்பதாக அவர் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதில் எங்கும் இவர் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என குறிப்பிட்டிருக்கவில்லை.

    தொடர்ந்து நாம் தேடியபோது, சாய் அப்யங்கர் சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் இது தொடர்பாக கேள்வி எழவே அதனை முற்றாக மறுதளித்த அவர் புதிய தயாரிப்பில் தான் இசையமைக்கவுள்ளதாக 

    தெரிவித்திருந்தார்.

    அத்துடன் இந்திய ஊடகங்களிலும் குறித்த தகவல் போலியானது என செய்திகள் வெளியாகியிருந்தமையும் எமது ஆய்வின் மூலம் காணக்கிடைத்தது.

    Puthiya thalaimurai

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் AGS  தயாரிக்கும் புதிய திரைப்படத்தில்  இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்  என பரவும் செய்தி தவறானவை  என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறாரா ?

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-04-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.