
INTRO :
ஹப்புத்தளை நகரில் வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “இலங்கையின் அப்புத்தளை நகரில் பெய்த கடும் மழையினை அடுத்து வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி… “ என இம் மாதம் 14 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (14.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக முதலில் நாம் குறித்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது,, இது மத்திய அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.
மத்திய அமெரிக்காவில் Nicaragua என்ற நாட்டில் கடந்த மே மாதம் 29ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்திகள் இதோ…

மேலும் இது தொடர்பாக எமது குழுவினர் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி உதய குமார அவர்களை தொடர்புகொண்டு, இந்த காலக்கட்டத்தில் ஹபுத்தளையில் மண் சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு அபாயம் இருந்ததாக என்று வினவியபோது, ‘’ஹபுத்தளை மண்சரிவு அபாயத்திற்குரிய பகுதியாக இருந்தாலும் இந்த காலக்கட்டத்தில் அவ்வாறான எவ்விதமான பாதிப்பும் இருக்கவில்லை,’’ என்றார்.
மேலும் ஹபுத்தளையில் சிறிய அளவான மழைப்பொழிவு இருந்ததாகவும், குறித்த வீடியோவில் உள்ளவாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு எவ்விதமான மழை வீழ்ச்சியும் பதிவாகவில்லை என உறுதி செய்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, ஹப்புத்தளையில் வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி என பரவும் தகவல் போலியானது என்பது உறுதியாகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:ஹப்புத்தளையில் வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி உண்மையா?
Written By: S G PrabuResult: False



