
INTRO :
30 வருடங்களாக இயங்கிவந்த கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரபூர்வமாக மூடப்பட்டது..!
cartoonnetwork “ என இம் மாதம் 12ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (12.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வார்னர் பிரதர்ஸ்க்கு சொந்தமான கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம், அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனல் ஆகும். குறித்த நிறுவனம் முற்றாக மூடப்பட்டதா என்று நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு வதந்தி பரவியது தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். Link
அப்போது கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ‘’நாங்கள் இன்னும் மரணிக்கவில்லை,’’ என்று பதிவிட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
மேலும் இரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அதே தகவல் பரவுகின்றமைக்கான காரணத்தினை நாம் ஆய்வு செய்தோம். அப்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அவர்கள் ஒன்றிணைந்து கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக #RIPcartoonnetwork என்ற ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள் என்று கூறி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தமையே காரணம் என தெரியவந்தது.
இது குறித்து ‘Hindustan Times’ கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்திடம் வினவியபோது, கார்ட்டூன் நெட்வொர்க் அல்லது ஸ்டுடியோ மூடப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை, என தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தமையும் எமது ஆய்வில் காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.



