Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-12-23
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என


    INTRO :

    ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “ மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா | Thedipaar News “ என இம் மாதம் 21 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (21.12.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)


    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டமைக்கு எந்தவொரு ஊடக அறிக்கையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிடவில்லை.

    மேலும் இது தொடர்பாக நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப்பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன அவர்களை நாம் தொடர்புகொண்டு வினவிய போது, இது முற்றிலும் போலியான தகவல் என்று  தெரிவித்தார்.

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய நிர்வாகிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷவை பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இம்முறை வெற்றிடமாக வைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

    Link 

    இதேவேளை, கடந்த புதன்கிழமை (2023, டிசம்பர் 20 ஆம் திகதி)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)  பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினரான சாகர காரியவசம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 3-4 வேட்பாளர்களை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி, தம்மிக்க பெரேரா, பரிசீலனையில் உள்ள நபர்களில் ஒருவராகும்.

    எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சியின் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தேர்தலுக்கு அண்மையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவா?

    Written By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-12-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.