Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பரவும் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-11-22
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO:  பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது தோல்வியை கொண்டாடும் வீடியோ என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வ


    INTRO:  
    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது தோல்வியை கொண்டாடும் வீடியோ என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link 

    சமூக வலைத்தளங்களில் “தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் அவரின் மகன்..!!

    இலங்கை, இந்திய, உலக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது

    YOUTUBE:- https://www.youtube.com/channel/UCHK8XG0Jn257CC6TQSkq_Rw?sub_confirmation=1

    FACEBOOK:- https://www.facebook.com/vettritelevision

    WEBSITE:- https://www.vettritv.com

    TIKTOK:- https://www.tiktok.com/@vettritv_news

    போன்றவற்றினுடாக இணைந்திருங்கள்..!” இம் மாதம் 16 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (16.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நடந்து முடிந்த தேர்தல் தோல்வியின் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது தோல்வியை கொண்டாடும் விதமாக நடினமாடியதாக எந்தவொரு பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கவில்லை.

    நாம் முதலில் குறித்த வீடியோவில் நன்கு அவதானித்தபோது, இது ஒரு கோவில் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது நன்கு அறியமுடிந்தது.

    தொடர்ந்து குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இதே வீடியோ கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, பதுளை தெல்பத்த கீழ் பிரிவு ஶ்ரீ கதிரேசன் கோயில் காவடி பெரும் திருவிழா கலந்துக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரோஷ் மற்றும் அவரது மகன் குறித்த மக்களுடன் நடினமாடியுள்ளமை பிராந்திய செய்தியாளர் ஒருவரை தொடர்புக்கொண்டு உறுதி செய்துக்கொண்டோம்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரோஷின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் கணக்கில் கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி பதுளை தெல்பத்த கீழ் பிரிவு ஶ்ரீ கதிரேசன் கோயில் காவடி திருவிழாவில் கலந்துக்கொண்ட போது வழங்கப்பட்டிருந்த நேரலையும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பகிரப்படும் வீடியோ தவறானது என்று  கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பரவும் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-11-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.